சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 2 அடி உயர லட்சுமி சிலை மீட்பு

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 2 அடி உயர லட்சுமி சிலையின் தொன்மை மற்றும் திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில், அம்மன் சிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து,
 ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 2 அடி உயர லட்சுமி சிலை மீட்பு

சென்னை:திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 2 அடி உயர லட்சுமி சிலையின் தொன்மை மற்றும் திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில், அம்மன் சிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். 'தன்னிடம் 2 அடி உயரமுள்ள வெண்கலத்தில் செய்யப்பட்ட லட்சுமி சிலை உள்ளது. இச்சிலையை தன் சகோதரி கொடுத்தார்' என்று அந்த அதிகாரி கூறினார்.

அவரது சகோதரியிடம் போலீசார் விசாரித்தனர்.அப்போது, 'மாமனார் காலத்தில் இருந்து, இந்த லட்சுமி சிலை எங்கள் வீட்டில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் மாமனார் இறந்து விட்டார்.'என் கணவரும் இறந்த பின், 1990ல், இந்த சிலையை என் சகோதரரிடம் கொடுத்தேன்' என்று கூறியுள்ளார்.இந்த சிலை தொடர்பாக, அவரிடம் எவ் வித ஆவணமும் இல்லை.

சிலையை மீட்ட போலீசார் வழக்குப் பதிந்து, அதன் தொன்மை; எந்த கோவிலுக்கு சொந்த மானது; திருடப்பட்டதா என, விசாரித்து வருகின்றனர்.வழக்கின் தன்மை கருதி, ஓய்வு பெற்ற அதிகாரி மற்றும் அவரது சகோதரியின் பெயர் உள்ளிட்ட விபரங்களை, போலீசார் வெளியிடவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
06-ஆக-202111:18:08 IST Report Abuse
தஞ்சை மன்னர் எல்லாம் அவா மயம் தான்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202110:56:31 IST Report Abuse
Mani . V இன்னும் எத்தனை பேர் இது போன்று திருடிக் கொண்டு போய் வைத்துள்ளார்களோ? (சரி அந்த அதிகாரியின் பெயரை ஏன் போடவில்லை? ஓ பெரியவா தப்பு பண்ணினா அது புண்ணியம். ஏழை, பாலைகள் செய்தா அது பாவம்)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X