பொது செய்தி

இந்தியா

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு 99.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

Added : ஆக 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 99.04 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால், கடந்த கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.மாணவியர்'முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற
 சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு 99.04 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

புதுடில்லி:சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 99.04 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால், கடந்த கல்வியாண்டுக்கான சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.மாணவியர்'முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில், உள்மதிப்பீட்டு நடைமுறையின்படி முடிவுகள் அறிவிக்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்தது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம் 21.13 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் 99.04 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுதும் 57 ஆயிரத்து 824 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் பெற்றுள்ளனர். இரண்டு லட்சத்து 962 மாணவர்கள் 90 - 95 சதவீத மதிப்பெண் பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 0.35 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.


விரைவில் வெளியாகும்



திருவனந்தபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 99.99 சதவீதம், பெங்களூரு மண்டலத்தில் 99.96 சதவீதம், சென்னையில் 99.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும், 16 ஆயிரத்து 639 மாணவர்களுக்கான மதிப்பீடுகள் முடிவடையாததால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அவை விரைவில் வெளியாகும்.தேர்வில் தேர்ச்சி பெறாத 17 ஆயிரத்து 636 மாணவர்களுக்கான துணை தேர்வுகள் இம்மாதம் 16 முதல், செப்., 15க்குள் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X