நாகாலாந்து அரசியல் பிரச்னை கூட்டத்தில் முக்கிய முடிவு| Dinamalar

நாகாலாந்து அரசியல் பிரச்னை கூட்டத்தில் முக்கிய முடிவு

Added : ஆக 03, 2021
Share
கோஹிமா:நாகாலாந்து அரசியல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அம்மாநில எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் முதல்வர் நீபு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது. இங்கு நீண்டகாலமாக பிரிவினைவாத பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு

கோஹிமா:நாகாலாந்து அரசியல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அம்மாநில எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் முதல்வர் நீபு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது. இங்கு நீண்டகாலமாக பிரிவினைவாத பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பிரிவினைவாத அமைப்புகளுடன் பல சுற்று பேச்சு நடந்து வருகிறது.

என்.எஸ்.சி.என். ஐ.எம்., எனப்படும் நாகாலிம் தேசிய சோஷியலிச கவுன்சில் மற்றும் என்.என்.பி.ஜி., எனப்படும் நாகா தேசிய அரசியல் குழு ஆகிய இரு அமைப்புகளுடன் 18 ஆண்டுகளில் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டு உடன்படிக்கை ஏற்பட்டது.ஆனாலும் தனி அரசியலமைப்பு மற்றும் கொடி ஆகியவற்றை கேட்டு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருவதை அடுத்து நாகாலாந்து அரசியல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் உள்ளது.

இதற்கு தீர்வு காண்பதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த 60 எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு எம்.பி.,க்கள் அடங்கிய பார்லிமென்ட் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கு மாநில முதல்வர் நீபு ரியோ ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, நாகாலாந்து அரசியல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X