பயங்கரவாதிகள் மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சிம்லா:'ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் தேசிய கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம்' என, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மிரட்டல்ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துஉள்ளது.சமீபத்தில் இம்மாநில பத்திரிகையாளர்கள் சிலருக்கு பதிவு

சிம்லா:'ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் தேசிய கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம்' என, பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


மிரட்டல்

ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துஉள்ளது.சமீபத்தில் இம்மாநில பத்திரிகையாளர்கள் சிலருக்கு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசியவர், தன்னை காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களான, சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் பொது ஆலோசகர் குர்பத்வந்த் சிங் என அறிமுகம் செய்துள்ளார்.அப்போது 'முதல்வர் ஜெய்ராம் தாக்குரை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்ற அனுமதிக்க மாட்டோம்' என மிரட்டல் விடுத்து உள்ளார்.


தேசிய கொடி

நேற்று முன்தினம் வந்த மற்றொரு அழைப்பில், 'பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் தேசிய கொடியேற்ற விடமாட்டோம்' என, மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து ஹிமாச்சல் சட்டசபையில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறியதாவது:தொலைபேசி மிரட்டல் குறித்து யாரும் அச்சம் அடைய தேவையில்லை. கவர்னர், மாநில பா.ஜ., தலைவர், முதல்வர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மூவர்ணக்கொடிக்காக உயிரை தியாகம் செய்யவும் இவர்கள் தயாராக உள்ளனர். சுதந்திர தினத்தன்று மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X