பொது செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு பணம் தராமல் அடம்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:சேமிப்பு கிடங்குகளில் இருந்து மது கடைகளுக்கு மது வகைகளை எடுத்து செல்லும் வாகனங்களின் ஒப்பந்ததாரர்களுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் பணம் தராமல் அலைக்கழிப்பு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது.வாடகை அந்நிறுவனத்திற்கு, மாநிலம் முழுதும், 43 மதுபான கிடங்குகள் உள்ளன. மது

சென்னை:சேமிப்பு கிடங்குகளில் இருந்து மது கடைகளுக்கு மது வகைகளை எடுத்து செல்லும் வாகனங்களின் ஒப்பந்ததாரர்களுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் பணம் தராமல் அலைக்கழிப்பு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது.வாடகை அந்நிறுவனத்திற்கு, மாநிலம் முழுதும், 43 மதுபான கிடங்குகள் உள்ளன. மது வகைகளை சப்ளை செய்யும் நிறுவனங்கள், தங்கள் ஆலைகளில் இருந்து, கிடங்குகளுக்கு மது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை அனுப்புகின்றன.

கிடங்குகளில் இருந்து மது பெட்டிகளை வாகனங்களில் எடுத்து சென்று, கடைகளில் இறக்கி வைக்க வேண்டும். இந்த பணியை, டாஸ்மாக் நிர்வாகம், வாகன போக்குவரத்து ஒப்பந்த தாரர்கள் வாயிலாக மேற்கொள்கிறது. இதற்காக, ஒரு பெட்டிக்கு 12 ரூபாய் வரை வாடகை வழங்கப்படுகிறது.


புகார்

தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெட்டிகள், கடைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. மது வகைகளை எடுத்து செல்லும் போது பாட்டில்கள் உடைந்தால், அதற்கான இழப்பீட்டு தொகை, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து தான் வசூல் செய்யப்படும். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள், மது பெட்டிகளை சரிபார்த்து கடைகளில் இறக்கி, ரசீதில் கையெழுத்திட்டு வழங்குவர்.அவற்றை, ஒப்பந்ததாரர்கள், மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் வழங்கி, வாடகை பணம் பெறுவர்.

அரசியல்வாதிகளின் துாண்டுதலில், 'ஆதாயத்தை' எதிர்பார்த்து, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க அலைக்கழிப்பு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.போராட்டம்கடந்த இரு மாதமாக, வாகன ஒப்பந்ததாரர்களுக்கு பணம் தரப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, ௧௫ நாட்களுக்கு ஒரு முறை பணம் பட்டுவாடா செய்யப்படும். ஒவ்வொரு ஒப்பந்ததாரரும், நுாற்றுக்கணக்கான வாகனங்களை பராமரிக்கின்றனர்.அதற்கான டீசல், டிரைவர், லோடுமேன் சம்பளம் என, பல லட்சம் செலவு செய்கின்றனர்.

பார்த்த வேலைக்கான பணம் தரப்படாததால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'அதிகாரிகளிடம் கேட்டால், அமைச்சரை பார்க்கும்படி கூறுகின்றனர். அமைச்சர் தரப்பில் பேசினால், இன்று, நாளை என்று அலைக்கழிக்கின்றனர். அதனால், போராட்டத்திற்கு தயாராகி வருகிறோம்' என்றனர்.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா பரவல், ஊரடங்கு போன்ற காரணங்களால், சில மாவட்டங்களில், பணம் வழங்க தாமதம் ஏற்பட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X