சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்னை மன்னித்து விடுங்கள்: யாஷிகா

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:-'இனி வாழ்நாள் முழுதும், குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். என் தோழி திரும்பி விடுவார் என்றே நினைத்தேன். என்னை மன்னித்து விடு பாவனி. உன் குடும்பத்தினரும், என்னை மன்னிக்க வேண்டும்' என, நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், சமீபத்தில், மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கினார். காரை,
என்னை மன்னித்து விடுங்கள்: யாஷிகா

சென்னை:-'இனி வாழ்நாள் முழுதும், குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். என் தோழி திரும்பி விடுவார் என்றே நினைத்தேன். என்னை மன்னித்து விடு பாவனி. உன் குடும்பத்தினரும், என்னை மன்னிக்க வேண்டும்' என, நடிகை யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், சமீபத்தில், மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கினார். காரை, யாஷிகா அதிவேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. உடன் பயணித்த தோழி, வள்ளி செட்டி பாவனி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவர் காயத்துடன் தப்பினர். இடுப்பு மற்றும் காலில் முறிவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த யாஷிகா, தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

தோழி இறந்தது குறித்து, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், யாஷிகா கூறியுள்ளதாவது:நான் எந்த மாதிரி மனநிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப்பெரிய விபத்தில் இருந்து, என்னை காப்பாற்றியதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்வதா; இல்லை என் நெருங்கிய தோழியை பறித்துக் கொண்டதற்காக பழிப்பதா என்று தெரியவில்லை.

ஒவ்வொரு வினாடியும், நான் பாவனியை, 'மிஸ்' செய்வேன். நீ என்னை மன்னிக்க வேண்டும். உன் குடும்பத்தை, இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கி விட்டேன். உன் ஆத்மா சாந்தி பெறட்டும். ஒரு நாள் நீ, என்னிடம் திரும்புவாய்; பிரார்த்தனை செய்கிறேன். உன் குடும்பத்தினர், ஒரு நாள் என்னை மன்னிப்பர் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
05-ஆக-202120:25:59 IST Report Abuse
nizamudin இறைவன் கூட மன்னிக்க மாட்டான் ?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
05-ஆக-202105:53:06 IST Report Abuse
meenakshisundaram யார் யாரை மன்னிக்கிறது ?இதற்க்கெல்லாம் 'பாவ மன்னிப்பு இருக்கா ?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202110:52:16 IST Report Abuse
Mani . V உனகென்னடியாத்தா, இப்படி சொல்லிட்டு அடுத்த மாதம் இன்னும் ரெண்டு பாய் ஃபிரண்டோட தண்ணியடித்து, கும்மாளம் போட கிளம்பிடுவ. ம், என்ன செய்ய? சட்டம் சரியில்லையே இல்லையென்றால் கொலை செய்த குற்றத்துக்கு இந்நேரம் உன்னை தொங்க விட்டு இருக்கணும். (ஆமா, நீ போட்ட அடங்காபிடாரி ஆட்டத்துக்கு கடவுளை எதற்கு பழிக்க வேண்டும்?)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X