கருந்துளைக்குப் பின்னால் ஒளி: விஞ்ஞானி குழு கண்டுபிடிப்பு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கலிஃபோர்னியா: பிளாக் ஹோல் என அறியப்படும் அண்டத்தில் உள்ள கருந்துளைக்குப் பின்னால் ஒருவித ஒளி தெரிவதாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானி டான் வில்கின்ஸ் மற்றும் அவரது குழுவினர் தங்கள் ஆராய்ச்சிமூலம் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினரது தொலைநோக்கியிலிருந்து 800 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள ராட்சத பிளாக் ஹோல் குறித்து இவர்கள் ஆராய்ச்சி

கலிஃபோர்னியா: பிளாக் ஹோல் என அறியப்படும் அண்டத்தில் உள்ள கருந்துளைக்குப் பின்னால் ஒருவித ஒளி தெரிவதாக ஸ்டான்போர்டு பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானி டான் வில்கின்ஸ் மற்றும் அவரது குழுவினர் தங்கள் ஆராய்ச்சிமூலம் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினரது தொலைநோக்கியிலிருந்து 800 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள ராட்சத பிளாக் ஹோல் குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.



latest tamil news




மூத்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஒளி அமைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். பிளாக் ஹோல் உள்ளே செல்லும் எந்த ஒரு ஒளியும் மீண்டும் வெளியே வராது. அதனால் இதற்குப் பின்னால் இருக்கும் ஒளியை நாம் காணமுடியாது.

பிளாக் ஹோல் பின்னால் தெரியும் ஒளிச் சிதறல் அதிக உஷ்ணத்திற்குள்ளாகிறது. இதற்கு முக்கியக் காரணம் பிளாக் ஹோலில் உள்ள ஈர்ப்பு விசை ஆகும். அதீத உஷ்ணத்தின்போது அணுக்களில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பும் எலக்ட்ரான்கள் ஓர் காந்த விசையை வட்டத்தை உருவாக்குகின்றன.


latest tamil news




பிளாக் ஹோல் ஆராய்ச்சிகள்



இந்த விசை பிளாக் ஹோல்மீது வில்போல வளைந்து காட்சியளிக்கிறது. இது அதிக ஆற்றலுடைய எலக்ட்ரானை உருவாக்குகிறது. இந்த எலக்ட்ரான்கள் எக்ஸ்ரே ஒளியை உருவாக்குகின்றன. இதனாலேயே பிளாக் ஹோலுக்கு பின்னால் ஆங்காங்கே ஒளி கங்குகள் உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதேபோல உலகெங்கிலும் பிளாக் ஹோல் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஆக-202115:09:42 IST Report Abuse
மதுமிதா பவர்கட்(அணில் இல்லை) வராத வெளிச்சம்
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202111:01:47 IST Report Abuse
Kalyan Singapore கதிரழகன், தமிழ் வாணன் போட்டது முற்றிலும் சரியே முடிந்தால் புக்கிட் பாதோக் நூலகம் சென்று Black Hole Wars என்ற நூலை படித்து பாருங்கள் கருந்துளை பற்றி பல தகவல்கள் கிடைக்கும் பயப்பட வேண்டாம் அந்த நூல் நம் போன்றோர் அறிய சரளமான மொழியில் எழுதப்பட்டுள்ளது
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202108:47:44 IST Report Abuse
Kasimani Baskaran எல்லையோ அல்லது முடிவோ இல்லாத பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிய முயல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X