பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : ஆக 03, 2021
Share
Advertisement
ஊதியம் உயர்வுபுதுடில்லி: டில்லியில் எம்.எல்.ஏ. க்கள் மாதந்தோறும் 53 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றனர். மத்திய அரசின் பரிந்துரையை தொடர்ந்து இவர்களது மாத ஊதியத்தை 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பயங்கரவாதி சுட்டுக்கொலைஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் சந்தாஜி பகுதியில் பயங்கரவாதிகள்

ஊதியம் உயர்வு

புதுடில்லி: டில்லியில் எம்.எல்.ஏ. க்கள் மாதந்தோறும் 53 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றனர். மத்திய அரசின் பரிந்துரையை தொடர்ந்து இவர்களது மாத ஊதியத்தை 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் சந்தாஜி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

பி.எஸ்.எப். வீரர்கள் பலி

அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் நக்சல் அமைப்பினர் பதுங்கி இருப்பதை அறிந்த பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று காலை அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் புருசிங் ராஜ்குமார் ஆகிய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

உச்ச நீதிமன்றம் அவகாசம்

புதுடில்லி: தெலுங்கானாவின் ஐதராபாதில் 2019ல் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்த 'என்கவுன்டர்' குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான குழு விசாரிக்கிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஆறு மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கியது.

சுஷில் குமார் மீது குற்றச்சாட்டு

புதுடில்லி: மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் முன்னாள் தேசிய ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் டங்கர் கொலை வழக்கில் சிக்கினர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் சுஷில் குமாரும் அவரது நண்பர்களும் சேர்ந்து 'ஹாக்கி' மற்றும் 'பேஸ்பால்' மட்டைகளால் 40 நிமிடங்கள் சாகர் டங்கரை தாக்கியதாகவும் இதனால் அவர் பலியானதாகவும் கூறப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு

புதுடில்லி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற நம் விளையாட்டு வீரர்களை டில்லி செங்கோட்டையில் வரும் 15ல் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதற்கிடையே ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நம் வீரர்கள் பெல்ஜியத்திடம் தோற்ற நிலையில் 'வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஒரு பகுதி. எங்கள் வீரர்களால் இந்தியா பெருமை அடைகிறது' என 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X