இந்தியா

ஒட்டு கேட்பு விவகாரம்: 'எடிட்டர்ஸ் கில்டு' வழக்கு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட
ஒட்டு கேட்பு, விவகாரம், 'எடிட்டர்ஸ் கில்டு', வழக்கு

புதுடில்லி :போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக நம் நாட்டில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என, 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட தாக தகவல் வெளியானது.இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, மூத்த பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தொடர்ந்துள்ளனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் நாளை விசாரிக்கப்பட உள்ளன. இந்நிலையில், எடிட்டர்ஸ் கில்டு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




அதில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு நிர்வாகம் தொடர்பான அனைத்து தகவல்கள், விளக்கங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடும் முக்கிய பணியில் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன.நாட்டு மக்களுக்கு அனைத்து உண்மைகளும் தெரிவதற்கு பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். எவ்வித அச்சுறுத்தல், மிரட்டல் இல்லாமல் பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும்.பெகாசஸ் உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்களையும் மத்திய அரசு உளவு பார்த்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சிறப்பு விசாரணை குழுவை நியமித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
04-ஆக-202109:16:07 IST Report Abuse
duruvasar அந்த பல்வேறு துறையை சேர்ந்த கடிதம் எழுதும் வல்லுனர்கள் 150 பேர் குழுவிலும் ஒரு மனு கொடுத்து இருக்கலாம்.
Rate this:
Cancel
04-ஆக-202104:03:40 IST Report Abuse
Taas Vyas இது பத்திரிகையாளனுகளுக்கொரு கேடயம்:அரசியல் வாதிக்கு போர்வாள்-கோர்ட்டுக்கு பட்டாணிக் கடலை-இதுல எவனாவது யோக்யனிருந்தா சொல்லுங்க?! பாவம் மக்கள் தான்,அவனுகளுக்கு எதுக்கு ஜனநாயகம்னு பேர் வைச்சாங்கன்னே தெரியலை.
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
03-ஆக-202122:34:49 IST Report Abuse
GMM உளவு பிரிவு அரசு நிர்வாக பிரிவு அல்ல. அது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரிவு. நீதிமன்றமும் நிர்வாகத்தின் ஒரு பிரிவு தான். ஆனால் அரசியல் சட்டம் நீதி துறைக்கு தனி அதிகாரம் , உரிமைகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டு கேட்பு விவகார வழக்கு ஒரு நிழல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X