அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கிறிஸ்துவர்கள் ஜெபத்தால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது'

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திருவள்ளூர்:''கிறிஸ்துவ மக்களின் வலிமையான ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, பால்வளத் துறை அமைச்சர் நாசர் பேசினார்.திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின் 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசர் பேசியதாவது:முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள்,
 'கிறிஸ்துவர்கள் ஜெபத்தால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது'

திருவள்ளூர்:''கிறிஸ்துவ மக்களின் வலிமையான ஜெபத்தால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது,'' என, பால்வளத் துறை அமைச்சர் நாசர் பேசினார்.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின் 40ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசர் பேசியதாவது:முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள், சிறுபான்மையினர் நலன் கருதி, பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்தனர்.

சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் ஆட்சி செய்தனர். ஆனால், தற்போதைய மத்திய அரசின் ஏழு ஆண்டு கால ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன. இதே ஜெபக் கூட்டத்தில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என, மூவரும் உள்ளோம். இதுவே மத நல்லிணக்கம்; மத ஒற்றுமை.

நம் நாட்டில் உள்ளவர்கள் பல்வேறு மொழிகள், மதங்களை சார்ந்து இருந்தாலும், அவர்களுக்குள் வேற்றுமை இல்லாமல் பழகி வருவதால், இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது.கிறிஸ்துவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
14-ஆக-202113:09:45 IST Report Abuse
ocean ஏற்கனவே ஒருவர் அவுத்து வுட்டது பத்தாதுன்னு இப்ப இவர் வேற அவுத்து வுடுறார்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
04-ஆக-202103:49:30 IST Report Abuse
RaajaRaja Cholan உண்மையைத்தான் பேசியிருக்கார்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
04-ஆக-202102:42:55 IST Report Abuse
BASKAR TETCHANA ஸ்டாலினுக்கு தகுந்த மந்திரி. இவனை போன்றவர்களை கட்சியில் இருந்தால் கட்சி உறுப்பட்டுவிடும். இப்போது இவன் ஆரம்பித்து உள்ளான் அடுத்து இன்னும் சில கிறித்துவ மந்திரிகள் பேசுவார்கள். ஆகா நான் நேற்று சொன்னது போல் ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் தான். கேட்க துப்பில்லாதவன். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X