சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கத்தரிக்காயை காப்பாற்ற முயற்சி!

Added : ஆக 03, 2021
Share
Advertisement
கத்தரிக்காயில் புழு தோன்றாமல் இருக்க, வங்கதேசத்தில் பின்பற்றப்படும் இனக்கவர்ச்சி பொறி முறை பற்றி கூறுகிறார் வேளாண் தொழில்நுட்ப முனைவர் சீனிவாசன் ராமசாமி: நாம் சாப்பிடும் கத்தரிக்காய், சில ஆண்டுகளுக்கு முன் வரை புழுக்களுடன் இருந்தன. இப்போது புழுவே வைக்காத கத்தரிக்காய்களை விளைவிக்கிறோம். அதனால், எத்தனை நாட்கள் ஆனாலும் வாங்கி வந்த கத்தரி காய்கள் அப்படியே, புழு
சொல்கிறார்கள்

கத்தரிக்காயில் புழு தோன்றாமல் இருக்க, வங்கதேசத்தில் பின்பற்றப்படும் இனக்கவர்ச்சி பொறி முறை பற்றி கூறுகிறார் வேளாண் தொழில்நுட்ப முனைவர் சீனிவாசன் ராமசாமி: நாம் சாப்பிடும் கத்தரிக்காய், சில ஆண்டுகளுக்கு முன் வரை புழுக்களுடன் இருந்தன. இப்போது புழுவே வைக்காத கத்தரிக்காய்களை விளைவிக்கிறோம்.

அதனால், எத்தனை நாட்கள் ஆனாலும் வாங்கி வந்த கத்தரி காய்கள் அப்படியே, புழு வைக்காமல் இருக்கின்றன.இது, மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்கள் புழக்கத்திற்கு வந்து விட்டதன் அறிகுறி.அந்த வகையில், வங்கதேசத்தில் இன்னமும், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை உருவாக்காமல், இனக்கவர்ச்சி பொறி மூலம், காயில் தோன்றும் புழுக்களை அழிக்கின்றனர்.கத்தரிக்காயை அழிக்கும் புழுவை கட்டுப்படுத்த, இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்துகின்றனர். இதனால், ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தத் தேவை இல்லாமல் போகிறது. அதே நேரத்தில், விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; விவசாயம் இயல்பான முறையில் நடக்கிறது.இதற்காக இனக்கவர்ச்சி குப்பிகளை வயல் வெளிகளில் பயன்படுத்துகின்றனர். காய்களை அழிக்கும் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பொறிகள், வயல்களில் வைக்கப்படும்.அந்த பொறியில் பெண் பூச்சியின் உடலில் உள்ளது போன்ற வாசனையை வைத்து விடுவர்.அதனால் கவர்ந்து இழுக்கப்படும் ஆண் பூச்சிகள், மொத்தம் மொத்தமாக அந்த இனக் கவர்ச்சி பொறிக்குள் சிக்கிக் கொள்ளும்; வெளியேற முடியாமல் இறந்து விடும்.ஒரு கட்டத்தில், நிறைய ஆண் பூச்சிகள் அந்த பொறிக்குள் சிக்கிக் கொள்வதால், இனச்சேர்க்கைக்கு ஆண் பூச்சி கிடைக்காமல், பெண் பூச்சிகள் தவிக்கும். நாளாவட்டத்தில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய முடியாமல், அவற்றின் எண்ணிக்கை குறைந்து, அழிந்து விடும்.

இந்த முறையில் இப்போது இன்னொரு புதிய கண்டுபிடிப்பாக, ஆண் பூச்சிகளை குழப்பும் தொழில்நுட்பத்தை பின்பற்றுகின்றனர்.காபி டிகா ஷன், பால், சர்க்கரை போன்றவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து அருந்தினால் தான், காபி குடித்த திருப்தி நமக்கு ஏற்படுகிறது. இதில் ஒன்று குறைந்தாலும், திருப்தி ஏற்படுவதில்லை.அதுபோல, ஆண் பூச்சிகளை குழப்பி விட, அவற்றை கவர்ந்திழுக்கும் ரசாயனத்தில் சில மாற்றங்களை செய்கின்றனர்.அதாவது காபி போலவும் இருக்கும்; ஆனால் காபி இல்லை என்பது போல, ஆண் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பொறிகளை அணுகும் ஆண் பூச்சிகள், அது பெண் பூச்சிகளின் மணம் இல்லை என்பதை புரிந்து கொள்ளும்.எனினும், அதை ஏற்க முடியாமல் குழப்பம் அடையும். அதனால், எவ்வித செயல்களையும் ஆற்றாமல், அப்படியே குழம்பி இருந்து விடும். இனச் சேர்க்கையில் ஈடுபடாமல் படிப்படியாக அழிந்துவிடும்!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X