தண்ணீர் கேட்ட நிருபரை சாகும்படி கூறிய சார்பு செயலர்!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் கேட்ட நிருபரை சாகும்படி கூறிய சார்பு செயலர்!

Added : ஆக 03, 2021
Share
சென்னை:குடிநீர் கேட்ட பத்திரிகையாளரை, சட்டசபை செயலக சார்பு செயலர், 'செத்தாலும் தர முடியாது' எனக்கூறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர்களை, பகல் 2:00 மணிக்கு, கலைவாணர்

சென்னை:குடிநீர் கேட்ட பத்திரிகையாளரை, சட்டசபை செயலக சார்பு செயலர், 'செத்தாலும் தர முடியாது' எனக்கூறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற பத்திரிகையாளர்களை, பகல் 2:00 மணிக்கு, கலைவாணர் அரங்கம் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

அங்கிருந்து, 2:45 மணி அளவில் போலீஸ் வேனில், தலைமைச் செயலகம் அழைத்து செல்லப் பட்டனர். மாலை, 3:15 மணிக்கு விழா நடந்த கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழா மாலை, 5:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாகவே அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். உள்ளே குடிநீர் வசதி செய்யப்படவில்லை.

சட்டசபை கூட்டரங்கின் மேல்தளத்தில் இருந்த, 'தீக்கதிர்' நிருபர் ஸ்ரீராமுலு, அங்கிருந்த சட்டசபை சார்பு செயலர் பாலசீனிவாசனிடம், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர், 'தண்ணீர் கொடுக்கக் கூடாது' எனக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த நிருபர், 'அவசரத்திற்கு என்ன செய்வது' எனக் கேட்க, 'செத்தால் சாவுங்கள்' என, அதிகாரி கோபமாக கூறி உள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த காவலர்கள், வெளியில் சென்று குடிநீர் எடுத்து வந்து, பத்திரிகையாளருக்கு வழங்கி உள்ளனர். சார்பு செயலரின் செயல், பத்திரிகையாளர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், அவசர தேவைக்காக மருத்துவர்களை நியமித்துள்ளனர். அவர்களுக்கும் குடிநீர் ஏற்பாடு செய்யவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X