ஆன்லைன் ரம்மிக்கு தடை ரத்து: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' ரம்மிக்கு தடை ரத்து: ஐகோர்ட்

Added : ஆக 03, 2021
Share
சென்னை:தமிழகத்தில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து இயற்றிய சட்டத்தை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 'உரிய விதிகளுடன் புதிதாக சட்டம் இயற்ற எந்த தடையும் இல்லை' என்றும், உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், 'ஆன்லைன் ரம்மி, போக்கர்' போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உயர்

சென்னை:தமிழகத்தில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து இயற்றிய சட்டத்தை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. 'உரிய விதிகளுடன் புதிதாக சட்டம் இயற்ற எந்த தடையும் இல்லை' என்றும், உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், 'ஆன்லைன் ரம்மி, போக்கர்' போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 'ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இம்மனுக்களை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஏ.கே.கங்குலி, அபிஷேக்மனு சிங்வி, அரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் வாதாடினர்.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டும் தடை விதித்து, சட்டம் இயற்றி உள்ளதாகவும், இதில் திறமை அடங்கி இருப்பதாகவும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டனர்.

தமிழக அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஆன்லைன் விளையாட்டால் பலர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்; தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. பொது நலன் கருதியே, இந்த சட்டம் இயற்றப்பட்டது,'' என்றார்.இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, முதல் பெஞ்ச் பிறப்பித்தது.

'முறைப்படுத்துவதற்கு உரிய விதிகள் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க முடியாது. உரிய காரணங்களை தெரிவிக்காமல் பிறப்பிக்கப்பட்ட, இந்தச் சட்டம் செல்லத்தக்கது அல்ல' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். 'உரிய விதிகளுடன், புதிய சட்டம் இயற்ற அரசுக்கு தடை ஏதும் இல்லை' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X