பொது செய்தி

தமிழ்நாடு

மறைமலை அடிகளார் பேரனுக்கு பணி நிரந்தரம்: முதல்வர் உத்தரவு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தற்காலிக பணியாளராக உள்ள தமிழறிஞர் மறைமலை அடிகளார் பேரனின் பணியை நிரந்தரம் செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மறைமலை அடிகளார் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பிக்கும் வகையில், 1997ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மறைமலை அடிகளார் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகளை அரசுடைமையாக்கினார். அவரது குடும்பத்தினருக்கு, 20 லட்சம்

சென்னை:உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தற்காலிக பணியாளராக உள்ள தமிழறிஞர் மறைமலை அடிகளார் பேரனின் பணியை நிரந்தரம் செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மறைமலை அடிகளார் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பிக்கும் வகையில், 1997ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மறைமலை அடிகளார் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகளை அரசுடைமையாக்கினார். அவரது குடும்பத்தினருக்கு, 20 லட்சம் காப்பு நிதி ஒதுக்கினார்.

இந்நிலையில், மறைமலை அடிகளாரின் இளைய புதல்வர் மறை பச்சையப்பன், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளார். அவர் குடியிருக்கும் வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புக்கு, பராமரிப்புக்கான நிலுவை தொகையை செலுத்த இயலாத நிலையில் உள்ளார்.

இதையறிந்த முதல்வர், அவர் வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, பராமரிப்புக்கான நிலுவை தொகையை தள்ளுபடி செய்தும், வாழ்நாள் முழுதும் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.மறை பச்சையப்பன் மகன் சிவகுமார், தற்போது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தொகுப்பூதியத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதையறிந்து, சிறப்பு நிகழ்வாக அவரது பணியை நிரந்தரம் செய்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X