தீரன் சின்னமலை நினைவு தினம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலை நினைவு தினம்

Added : ஆக 03, 2021
Share
சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.சென்னை, கிண்டி திரு.வி.க., தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அருகே, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்.,
 தீரன் சின்னமலை நினைவு தினம்

சென்னை:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது.

சென்னை, கிண்டி திரு.வி.க., தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அருகே, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., மற்றும் முன்னாள் அமைச்சர்கள், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தும், படத்திற்கு மலர் துாவியும் மரியாதை செலுத்தினர்.பா.ஜ., சார்பில், மூத்த தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கி, துாக்கு கயிற்றை முத்தமிடும் நேரத்திலும் சிங்கமென வாழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாளில், அவரது வீரத்தையும், தீரத்தையும், நாட்டுப்பற்றையும் நாமும் பெறுவோம். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும், மக்களுக்கும் உண்மையாக இருப்பதே, தீரன் சின்னமலைக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X