கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை'

Added : ஆக 03, 2021
Share
சென்னை:''கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். க்ஷஉலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டும் பிரத்யேக அறையை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ
 'கேரளாவில் இருந்து வரும்  அனைவருக்கும் பரிசோதனை'

சென்னை:''கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். க்ஷ

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டும் பிரத்யேக அறையை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில், தலா 12 லட்சம் ரூபாய் செலவில் தாய்ப்பால் ஊட்டும் அறைகள் விரைவில் திறக்கப்படும். தற்போது 24 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படுகின்றன.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன. தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்த போது, கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.


தட்டுப்பாடு இல்லை

விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டோம். கேரளாவில் இருந்து விமானங்கள் மற்றும் ரயில்களில் தமிழகம் வரும் பயணியருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். இந்த பரிசோதனை, ஓரிரு இடங்களில் மட்டுமே நடக்கிறது. விரைவில், மாநிலம் முழுதும் தீவிரப்படுத்தப்படும்.

நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தவரை, சென்னையில் 82 சதவீதம்; விருதுநகரில் 84 சதவீதம்; ஈரோடில் 37 சதவீதம்; கோவையில் 43 சதவீதம்; திருப்பூரில் 46 சதவீதம் என, குறைவான நோய் எதிர்ப்பு திறன் உள்ள மாவட்டங்களில் கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்படும்.மத்திய அரசிடமிருந்து 2.25 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 2.18 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை.

இந்த மாதத்தில் 79 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில், முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.'டெல்டா பிளஸ்'புதிதாக உருமாறிய வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை 10 பேர், 'டெல்டா பிளஸ்' தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'1,250 குழந்தைகளுக்குகொரோனா நிவாரணம்'எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடந்த, உலக தாய்ப்பால் நிகழ்ச்சியில் பங்கேற்ற, சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 1,250 குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X