அடிப்படை வசதிகள் கேட்டு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் கேட்டு

Added : ஆக 03, 2021
Share
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் விரிவாக்கப் பகுதிகளான மணம்பூண்டி மற்றும் தேவனுார் புதுநகரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் பி.டி.,ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர். திருக்கோவிலுார் நகரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், இதன் விரிவாக்க பகுதிகளான மணம்பூண்டி, தேவனுார் கூட்ரோடு புதுநகரில், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் விரிவாக்கப் பகுதிகளான மணம்பூண்டி மற்றும் தேவனுார் புதுநகரில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் பி.டி.,ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருக்கோவிலுார் நகரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், இதன் விரிவாக்க பகுதிகளான மணம்பூண்டி, தேவனுார் கூட்ரோடு புதுநகரில், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வசித்து வருகின்றனர்.தேவனுார் ஊராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு வசதிகளின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் முறையாக பராமரிக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது.

இப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமையில், அப்பகுதி மக்கள், மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X