எல்லையில் இந்தியா - சீனா படைகளை விலக்க சம்மதம்;

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி ;இந்திய - சீன எல்லையில் அமைதி திரும்ப வேண்டி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சு சமீபத்தில் நடந்தது. அப்போது, 'கோக்ரா ஹைட்ஸ்' பகுதியில் இருந்து படைகளை முழுதுமாக விலக்கிக் கொள்ள இரு தரப்பும் சம்மதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இந்திய - சீன எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஆண்டு அத்துமீற முயன்றனர்; இது இரு நாட்டு
எல்லை, படைகள்,  சம்மதம், இந்தியா, சீனா,

புதுடில்லி ;இந்திய - சீன எல்லையில் அமைதி திரும்ப வேண்டி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சு சமீபத்தில் நடந்தது. அப்போது, 'கோக்ரா ஹைட்ஸ்' பகுதியில் இருந்து படைகளை முழுதுமாக விலக்கிக் கொள்ள இரு தரப்பும் சம்மதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய - சீன எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஆண்டு அத்துமீற முயன்றனர்; இது இரு நாட்டு ராணுவத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தியது.


முக்கியத்துவம்


பாங்காங் சோ ஏரிக்கரை பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் நம் வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இதையடுத்து, இரு நாட்டு ராணுவமும் ஆயிரக்கணக்கான வீரர்களை எல்லையில் குவித்தன. இதனால் எல்லையில் போர் மூளும் சூழல் உருவானது. நிலைமையை கட்டுக்குள் வைக்க இரு தரப்பு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சு நடந்தது. இதில், படைகளை திரும்பப் பெற இரு தரப்பும் சம்மதித்ததை அடுத்து, வடக்கு மற்றும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கரை பகுதியில் கடந்த பிப்., முதல் படைகளை திரும்ப பெறும் பணி படிப்படியாக துவங்கியது.


இதையடுத்து ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு தொடர்ந்து நடந்த நிலையில், இதன் 11வது சுற்று பேச்சு ஏப்ரலில் நடந்தது. அதன் பின் மூன்றரை மாதங்கள் பேச்சு நடக்காமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 31ல் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையில் 12வது சுற்று பேச்சு நடந்தது.சீன எல்லைக்கு உட்பட்ட மோல்டோ என்ற இடத்தில் ஒன்பது மணி நேரம் நடந்த பேச்சின் போது, தெப்சங், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதியில் படைகளை விலக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இந்திய தரப்பு அழுத்தம் கொடுத்தது.


கருத்து வேறுபாடு


'எல்லையில் அமைதி திரும்பினால் மட்டுமே இந்திய - சீன உறவு வலுப்படும்' என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வலியுறுத்தி இருந்தார்.இதே கருத்து 12வது சுற்று பேச்சிலும் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, கோக்ரா ஹைட்ஸ் பகுதி யில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு நாட்டு ராணுவமும் சம்மதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.'மூன்று நாட்களில் படை விலகல் நடவடிக்கையை துவங்க இரு தரப்பும் சம்மதித்துள்ளன. 'ஆனால் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


கல்வான் மோதல் காட்சிகள்வெளியிட்டது சீன ராணுவம்!



சமீபத்தில் நடந்த 12வது சுற்று ராணுவ பேச்சு குறித்து, இந்திய - சீன ராணுவம் கூட்டாக நேற்று அறிக்கை வெளியிட்டன. அதில் 'கிழக்கு லடாக் எல்லையில் அமைதியும், நல்லிணக்கமும் திரும்ப கமாண்டர் அளவிலான பேச்சை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது' என, இரு தரப்பும் தெரிவித்தன.

இந்நிலையில் சீன ராணுவம் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டது. அதில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பு வீரர்களுக்கு இடையே கடந்த ஆண்டு நடந்த பயங்கர மோதல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.அதில் சீன வீரர்கள், உயரமான பகுதியில் இருந்து நம் வீரர்கள் மீது கற்களை வீசுகின்றனர். மிக வேகமாக ஓடும் பாங்காங் ஏரிக்குள் இறங்கும் சீன வீரர்கள் நிலை தடுமாறி விழுவதும், இரு தரப்பும் படைகளை குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-ஆக-202121:49:16 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் இது மோடியின் வெற்றி அல்ல என்று நாங்கள் கதறுவோம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202108:59:50 IST Report Abuse
Kasimani Baskaran ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் வழியாக செல்லும் சாலைகளை முடக்கவில்லை என்றால் சீனாவை ஒரு பொழுதும் நம்மால் அடக்க முடியாது. ஆகவே முதல் வேலையாக பாக்கிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீரை மீட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X