2ம் அலை குறையவில்லை: சுகாதார அமைச்சகம் விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2ம் அலை குறையவில்லை: சுகாதார அமைச்சகம் விளக்கம்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி : 'நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் குறையவில்லை' என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் குறையவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.கேரளாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
2ம் அலை ,  சுகாதார அமைச்சகம் , விளக்கம்

புதுடில்லி : 'நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் குறையவில்லை' என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:நம் நாட்டில் கொரோனா இரண்டாவது அலை முற்றிலும் குறையவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.தேசிய அளவில் அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறது. நாடு முழுதும் 44 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 222 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X