பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு விவசாயி சான்றிதழ் இன்று முதல் சிறப்பு முகாம்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : நுண்ணீர் பாசனம் அமைக்க குறுவட்ட அளவில் சிறு, குறு விவசாயி சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனங்களுடன் இணைந்து இன்று 4ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இன்று சத்தியமங்கலம்,

விழுப்புரம் : நுண்ணீர் பாசனம் அமைக்க குறுவட்ட அளவில் சிறு, குறு விவசாயி சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலைத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனங்களுடன் இணைந்து இன்று 4ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.இன்று சத்தியமங்கலம், சித்தலிங்கமடம், வானுார், விக்கிரவாண்டி, வளவனுார், விழுப்புரம், வடசிறுவளூர், ரெட்டணை, அன்னியூர், சிறுவாடி ஆகிய கிராமங்களில் நடக்கிறது. நாளை 5ம் தேதி செஞ்சி, திருவெண்ணைநல்லுார், நெமிலி, கஞ்சனுார், கண்டமங்கலம், ஆவணிப்பூர், அரகண்டநல்லுார், வல்லம், தீவனுார், மேல்மலையனுார், மரக்காணத்தில் நடக்கிறது.6ம் தேதி அரசூர், கிளியனுார், சித்தலம்பட்டு, ஒலக்கூர், முகையூர், மேல்ஒலக்கூர், மயிலம், காணை, அவலுார்பேட்டை, திண்டிவனம், பிரம்மதேசத்திலும், 7ம் தேதி உப்புவேலுார், சாத்தாம்பாடியில் நடக்கிறது. விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X