அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும்'

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'கிரீமிலேயர் வரம்பை நிர்ணயிப்பதில், வேளாண் வருமானத்தையும், சம்பளத்தையும் சேர்க்கக்கூடாது. கிரீமிலேயர் வரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஜாதி அடிப்படையிலான சமூக

சென்னை:'கிரீமிலேயர் வரம்பை நிர்ணயிப்பதில், வேளாண் வருமானத்தையும், சம்பளத்தையும் சேர்க்கக்கூடாது. கிரீமிலேயர் வரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஜாதி அடிப்படையிலான சமூக நிலைதான், இடஒதுக்கீட்டுக்கு அடிப்படை என்பதால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும், இந்த இட ஒதுக்கீடை வழங்க வேண்டும். ஆனால், சமூக நீதி தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக, கிரீமிலேயர் தத்துவத்தை, இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் திணித்தது.

அதன்படி, வேளாண் வருமானம், சம்பளம் ஆகியவை இல்லாமல், பிற ஆதாரங்களில் இருந்து, ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருவாய் உள்ளோர் தான், கிரீமிலேயர்களாக கருதப் பட்டு, ஓ.பி.சி., இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.எனவே, 'கிரீமிலேயர் வரம்பை நிர்ணயிப்பதில், வேளாண் வருமானமும், சம்பளமும் சேர்க்கப்படாது;

கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதை உடனே, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
04-ஆக-202121:42:52 IST Report Abuse
m.viswanathan பிராமணர் அல்லாதோர் கிரீமிலேயர் வரம்பை இரண்டு கோடிகளுக்கு மேல் உயர்த்தி ஏழை என அறிவித்து விடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X