பொது செய்தி

தமிழ்நாடு

நகர பஸ்களில் ஆண்களிடம்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : திருவள்ளூர் மண்டலத்தில் நகர பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை.அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:நகர பஸ்களில் மகளிருக்கு இலவசம் என அனுமதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வசூலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, திருவள்ளூர்

விழுப்புரம் : திருவள்ளூர் மண்டலத்தில் நகர பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதில்லை.அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:நகர பஸ்களில் மகளிருக்கு இலவசம் என அனுமதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வசூலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, திருவள்ளூர் மண்டலம், ஊத்துக்கோட்டை கிளையைச் சேர்ந்த பஸ்சில் கடந்த 31ம் தேதி கண்டக்டர் பழனி என்பவர் ஒரு பயணிடம் 8 ரூபாய் வசூலிப்பதற்கு 10 ரூபாய் வசூலித்தது தெரியவந்தது. உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் 74 நகர வழித்தடங்களிலும் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் என்பது உண்மைக்குப் புறம்பான தகவல். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X