பொது செய்தி

தமிழ்நாடு

மீட்கப்படுமா? ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தீர்த்தகுளம்...திண்டிவனம் நகராட்சி நவடிக்கை எடுக்குமா?

Added : ஆக 03, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வந்த தீர்த்தக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டிவனம் நகராட்சி பகுதியில், நிலத்தடி நீர் ஆதரமாக உள்ளது ராஜாங்குளம் மற்றும் தீர்த்தக்குளம். தற்போது,

திண்டிவனம் : திண்டிவனத்தில் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வந்த தீர்த்தக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவு நீர் குளமாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டிவனம் நகராட்சி பகுதியில், நிலத்தடி நீர் ஆதரமாக உள்ளது ராஜாங்குளம் மற்றும் தீர்த்தக்குளம். தற்போது, ராஜாங்குளம் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் உள்ளது. திண்டிவனத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு எதிரில் 2.89 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீர்த்தக்குளம். இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும்.ஆனால் தற்போது, தீர்த்தகுளம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சுருங்கிப் போனது.

தற்போது குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, குளத்தின் கரையைச் குற்றி கான்கீரிட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் குளத்திற்கான நீர் வரத்து வழிகள் தடைபட்டுப் போனது.கடந்த 2008-2009ம் ஆண்டில் நீர் நிலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீர்த்தகுளத்தைச் சுற்றி பொது மக்கள் நடந்து செல்வதற்காக 6 அடி அகலத்தில் சிமென்ட் பாதை அமைக்கப்பட்டது. தற்போது அந்த பாதை இருந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.மேலும், குளத்தை சுற்றி அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பிளாஸ்டிக் குப்பைகள் என அனைத்தும் குளத்திற்குள் வந்து சேர்வதால், குளம் கழிவுநீர் குட்டையாகிப் போனதுடன், நீர் மாசடைந்து, அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.குளத்திலுள்ள தண்ணீர் தெரியாத அளவிற்கு வெங்காயத்தாமரை, பாசை செடிகளால் சூழ்ந்துள்ளன. இதனால் நிலத்தடி நீரும் பாழாகி வருகிறது.நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தீர்த்தகுளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அப்பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற்றும் வீடுகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், குளத்தை முழுமையாக துாய்மைப்படுத்தி, நீர் வரத்து வழிகளைக் கண்டறிந்து குளத்தில் நீர் தேங்கவும், நிலத்தடி நீர் உயரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X