பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இழப்பீடு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் அமைச்சர் மஸ்தானிடம் அளித்துள்ள மனு:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின்

செஞ்சி : செஞ்சி, மேல்மலையனுார் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் அமைச்சர் மஸ்தானிடம் அளித்துள்ள மனு:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் 710 கிலோ வாட் மற்றும் 110 கிலோ வாட் மின் வழிபாதை அமைத்து வருகின்றனர்.இதற்காக மின் கோபுரங்கள் அமைத்து வருகின்றனர்.இதில் ஏராளமான விவசாய விளை பொருட்கள் அழிந்து விட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கிய பிறகு பணிகளைத் துவங்க வேண்டும்.
இந்த விதிமுறையை மீறி விவசாயிகளை மிரட்டி கம்பி இழுத்து வருகின்றனர்.திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிர்களுக்கு உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்கியுள்ளனர். அதே போல் செஞ்சி, மேல்மலையனுார் விவசாயிகளுக்கு உயர்ந்த பட்ச இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X