பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டை டோல்கேட் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறது என சுகாதார மதிப்புச் சான்று வழங்குவதற்காக உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தணிக்கை ஆணைய தணிக்கையாளர்

உளுந்துார்பேட்டை : சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறது என சுகாதார மதிப்புச் சான்று வழங்குவதற்காக உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தணிக்கை ஆணைய தணிக்கையாளர் வினாயகசெல்வன் ஆகியோர் உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் உள்ள 9 ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.அப்போது சமையலறை, உணவு பொருட்கள் வைக்கும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, உணவு மற்றும் குடிநீர் தரம் குறித்து ஆய்வு செய்ய பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.ஆய்வுக்குப் பின், சுகாதார மதிப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இந்த ஆய்வு இந்தியாவிலேயே உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில்தான் முதன்முறையாக பரிசோதனைக்கு உணவு பொருள் எடுத்துச் செல்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் ஒரு ஓட்டலில் ஆய்வு செய்து 3 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X