சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் கடத்தல் 2 பேர் கைது 

Added : ஆக 03, 2021
Share
Advertisement
செஞ்சி : அரசு புறம்போக்கு இடத்தில் மண் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மண் எடுப்பதாக செஞ்சி தாசில்தார் ராஜனுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் ராஜன், சத்தியமங்கலம் வி.ஏ.ஓ., சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர்.அப்போது ஜே.சி.பி., மூலம் மண்

செஞ்சி : அரசு புறம்போக்கு இடத்தில் மண் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மண் எடுப்பதாக செஞ்சி தாசில்தார் ராஜனுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து தாசில்தார் ராஜன், சத்தியமங்கலம் வி.ஏ.ஓ., சரவணன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர்.அப்போது ஜே.சி.பி., மூலம் மண் எடுத்து லாரியில் ஏற்றி கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர்.ஜே.சி.பி., மற்றும் லாரியை தாசில்தார் பறிமுதல் செய்து, சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து சொக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி., உரிமையாளர் ராஜவேல், 30; கொழப்பலுார் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக், 41; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X