அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., இரட்டை வேடம் கமல் குற்றச்சாட்டு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
கோவை:''மேகதாது அணை விவகாரத்தில், பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறினார்.கோவையில் , அவர் அளித்த பேட்டி:கோவை மக்கள் நேர்மையாக ஓட்டளித்தனர். நன்றி அறிவிப்புக்கு முன்பே வந்திருக்க வேண்டும். பெருந்தொற்று தடையாக இருந்தது. தோல்வி வந்ததால், அரசியலை விட்டு போக மாட்டேன். வெற்றியை விட, தோல்விகள் கற்றுத்தந்த பாடம் அனேகம். கோவை மக்கள் தந்தது,

கோவை:''மேகதாது அணை விவகாரத்தில், பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது,'' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறினார்.

கோவையில் , அவர் அளித்த பேட்டி:கோவை மக்கள் நேர்மையாக ஓட்டளித்தனர். நன்றி அறிவிப்புக்கு முன்பே வந்திருக்க வேண்டும். பெருந்தொற்று தடையாக இருந்தது. தோல்வி வந்ததால், அரசியலை விட்டு போக மாட்டேன். வெற்றியை விட, தோல்விகள் கற்றுத்தந்த பாடம் அனேகம். கோவை மக்கள் தந்தது, நம்பிக்கை தரும் பாடம்.

என் மீது அன்பு கொண்டவர் மம்தா. அவர் அழைக்கும்பட்சத்தில், இணைந்து செயல்பட முடிவெடுப்போம். பார்லியை முடக்கியிருப்பது, மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசு வேவு பார்க்க முடியாது.கொங்கு நாடு என்பது அரசியல் கோஷம். மக்களின் தேவையாக பார்க்கவில்லை. இதற்கு முன், ஈஸ்ட் இந்தியா கம்பெனி என ஒன்றிருந்தது. இப்போது, நார்த் இந்தியா கம்பெனி உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் சம்பந்தப்படாமல், மக்கள் பங்கு பெற வேண்டும். அதிகாரம் மக்கள் கையில் வழங்கப்பட வேண்டும். கருணாநிதிக்கு நிறைய சிலைகள் இருக்கின்றன. மக்களுக்காக உழைத்த பென்னி குயிக் நினைவிடத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விஷயத்தில், தி.மு.க., அரசு இயன்றதை செய்து வருகிறது; இன்னமும் செய்யலாம். இவ்வாறு, கமல் கூறினார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தொடர்பாக கேட்டதற்கு, ''இந்தியாவில், அதிகமாக இரட்டை வேடத்தில் நடித்தவன் நான். இரட்டை வேடம் போடுவோரை சட்டென அறிந்து கொள்வேன்.''மேகதாது அணை விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர். இருவருக்கும் பெயர் வெவ்வேறாக இருந்தாலும், இருவருமே மத்திய அரசின் பொம்மைகள் தான்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X