அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பஸ் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை'

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:''பஸ் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., தவறான தகவலை தெரிவித்துள்ளார்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:மகளிருக்கு இலவச பஸ் பயணம் அனுமதிக்கப் பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வரை, 6.53 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். எதிர்பார்ப்புமேலும், 47

சென்னை:''பஸ் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., தவறான தகவலை தெரிவித்துள்ளார்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி:மகளிருக்கு இலவச பஸ் பயணம் அனுமதிக்கப் பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வரை, 6.53 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.


எதிர்பார்ப்பு

மேலும், 47 ஆயிரத்து, 846 திருநங்கையர்; 4.43 லட்சம் மாற்றுத் திறனாளிகள்; அவர்களின் உதவியாளர்கள், 36 ஆயிரத்து, 59 பேரும் இலவசமாக பயணித்துள்ளனர். தினமும், 30 லட்சம் பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணம் செய்கின்றனர். மகளிர், 40 சதவீதம் பயணிப்பர் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பஸ்சில், 5 ரூபாய் கட்டணத்தை தவிர்த்து, 10 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக பன்னீர்செல்வம்., தெரிவித்துள்ளார். அவர் முழு விபரம் தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். பஸ்சில், 5 ரூபாய் கட்டணம், 5 ரூபாயாகவே உள்ளது. இழப்பை ஈடு செய்ய, கட்டணம் எதுவும் உயர்த்த வில்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படுகிறது. தற்போது, 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பில் உள்ள போக்குவரத்து துறையை புதுப்பிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, பன்னீர்செல்வம்., குறிப்பிட்டு கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் பேச்சே இல்லை.


நடவடிக்கை

பல இடங்களில், விமான நிலையம் அமைக்க கேட்டுள்ளனர். முதல்வருடன், மத்திய அரசுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், பேட்டரி பஸ்கள் வாங்க உள்ளோம். முதல் கட்டமாக, 100 பேட்டரி பஸ்கள் வாங்கப்பட உள்ளன.இவ்வாறு ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X