அரசியல் செய்தி

தமிழ்நாடு

மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி அரசுக்கு பழனிசாமி., கோரிக்கை

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:'மரவள்ளி கிழங்கில், மாவு பூச்சியின் தாக்குதலை தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் kழனிசாமி., வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை:சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட, 22 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில், மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வருகின்றனர். மரவள்ளி

சென்னை:'மரவள்ளி கிழங்கில், மாவு பூச்சியின் தாக்குதலை தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் kழனிசாமி., வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட, 22 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில், மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வருகின்றனர். மரவள்ளி கிழங்கை நம்பி, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில், 470 ஆலைகளும், ஒரு லட்சம் தொழிலாளர்களும், பயனடைந்து வருகின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச், ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்படுகிறது. மரவள்ளி பயிரின் முக்கிய எதிரி மாவுப்பூச்சி. தற்போது, மாவுப்பூச்சி தாக்குதலால், மரவள்ளிக் கிழங்கு பயிர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி, உற்பத்தி குறைந்து பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கடந்த ஆண்டு மாவுப்பூச்சியின் தாக்கம், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அரசு செலவில் மருந்து தெளிக்கப்பட்டு பயிர் காப்பாற்றப்பட்டது. விவசாயிகளும் நஷ்டத்தில் இருந்து மீண்டனர்.தற்போது, சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட்டங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

அவை மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.எனவே, உடனடியாக தேவையான நிதியை ஒதுக்கி, பூச்சி மருந்து தெளித்து, மாவுப்பூச்சி பாதிப்பில் இருந்து, மரவள்ளிக் கிழங்கு பயிரிட்ட விவசாயிகளை காக்க வேண்டும்.இவ்வாறு, பழனிசாசமி., கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X