எம்.பி.,க்களை பேச விடாமல் சூழ்ந்து நின்று அமளி!

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
பார்லிமென்டில் விவாதங்களில் பங்கேற்கும் எம்.பி.,க்களை பேசவிடாமல் சூழ்ந்து நின்று, 'போஸ்டர்'களை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபடும் 'புது டிரெண்ட்'டை எதிர்க்கட்சியினர் உருவாக்கி வருகின்றனர்.முக்கிய பிரமுகர்களின் மொபைல் போன் பேச்சு ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான தகவலை முன்வைத்து பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
எம்.பி.,க்கள், சூழ்ந்து நின்று பார்லிமென்ட், அமளி!

பார்லிமென்டில் விவாதங்களில் பங்கேற்கும் எம்.பி.,க்களை பேசவிடாமல் சூழ்ந்து நின்று, 'போஸ்டர்'களை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபடும் 'புது டிரெண்ட்'டை எதிர்க்கட்சியினர் உருவாக்கி வருகின்றனர்.

முக்கிய பிரமுகர்களின் மொபைல் போன் பேச்சு ஒட்டு கேட்கப்பட்டதாக வெளியான தகவலை முன்வைத்து பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கி வருகின்றனர். எதிர்க்கட்சியினரின் அமளி நேற்றும் தொடர்ந்தது. ராஜ்யசபாவில் அலுவல்களை ரத்து செய்து போன் ஒட்டு கேட்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று நிராகரித்தார்.


மீண்டும் ஒத்திவைப்பு



''பெரும்பான்மை எம்.பி.,க்கள் சபை அலுவல்களை தொடர விரும்புகின்றனர். எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை இப்படித்தான் நடத்த வேண்டுமென அதிகாரம் செலுத்த முடியாது,'' என வெங்கையா நாயுடு கூறினார்.பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், ''திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரக் ஒ பிரையன் பார்லிமென்ட் நடவடிக்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து அமளி அதிகரித்ததால் சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியை தொடர்ந்தனர். பல்வேறு மொழிகளிலும் கோஷமிட்டு பரபரப்பை கிளப்பினர். இதனால் மீண்டும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
மதியத்துக்கு மேல் சபை கூடியபோது, சிறு, குறு தொழில் நிறுவன திவால் சீரமைப்பு மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகளின் எம்.பி.,க்கள் பேசினர்.வழக்கமாக சபையின் மையப் பகுதிக்கு சென்று, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமிடுவர். ஆனால், நேற்று மசோதா குறித்து பேசிக் கொண்டிருக்கும் எம்.பி.,க்களின் இருக்கைக்கே சென்று அவரை சூழ்ந்து நின்றபடி கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.அமளி காட்சிகளை தவிர்த்து மிக கவனமாக அலுவல்களை மட்டுமே ராஜ்யசபா 'டிவி' குழுவினர் படம் பிடிப்பது வழக்கம்.ஆனால், நேற்று விவாதத்தில் பங்கேற்று பேசுகின்ற எம்.பி.,யின் பின்னால் நின்று, போஸ்டரை ஏந்தியபடி எதிர்க்கட்சியினர் கோஷம் போட்டதால் 'டிவி' கேமராவுக்குள் அமளியும், போஸ்டர்களும் தெரிந்தன. எதிர்க்கட்சியினரின் இந்த புதிய வகை அமளியால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. பேசுவதற்கு வாய்ப்பு பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மசோதா குறித்து பேசாமல், போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை பேசினர்.


சுயநலம் உள்ளவர்கள்


அதுவரையில் கோஷமிட்ட எம்.பி.,க்கள் போன் ஒட்டு கேட்பு குறித்த பேச்சின்போது மட்டும் அமைதி காத்தனர். இதையடுத்து அவர்களது 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், ராஜ்யசபாவில் கொந்தளிப்பான சூழல் நிலவியது.

இறுதியாக மசோதா நிறைவேற்றத்தின்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதா பற்றி பேசாமல், வேறு விஷயங்களை பேசுகின்றனர். அப்போது மட்டும் கோஷம் போடுவதை கைவிட்டு சக உறுப்பினர்கள் அமைதி காக்கின்றனர். மற்றவர்கள் பேசும் போது கூச்சல் போடுகின்றனர்.சுயநலம் உள்ளவர்களால் தான், இவ்வாறு செயல்பட முடியும். விவாதத்தில் பங்கேற்று மசோதா மீது பேசிய ஆளும் கட்சி எம்.பி.,க்களை மிரட்டும் வகையில், அவர்கள் அருகில் போய் நிற்பதும், கோஷம் போடுவதுமாக நடந்து கொள்கின்றனர்.இது முற்றிலும் கண்டனத்திற்குரியது. இருப்பினும் இத்தனை அமளிக்கு மத்தியிலும் மசோதா குறித்து பேசியஎம்.பி.,க்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து கடும் அமளிக்கு மத்தியில் மசோதா நிறைவேறியது. அமளி தொடர்ந்ததால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.


சீரமைப்பு மசோதா


லோக்சபா அலுவல் நேற்று கேள்வி நேரத்துடன் துவங்கியது. போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியபோது கடும் அமளிக்கு இடையே ராணுவ துறைக்கான அத்தியாவசிய சேவை குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சபை ஒத்தி வைக்கப்பட்டது. மாலையில் சபை கூடியபோது நடுவர் மன்ற சீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற காங்., உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கும், அமைச்சர் அர்ஜுன் ராமுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டது. விவாதங்களில் பங்கேற்கும் ஆளும் கட்சி எம்.பி.,க்களை பேசவிடாமல் சூழ்ந்து நின்று, கோஷம் எழுப்பும் புது டிரெண்டை எதிர்க்கட்சியினர் நேற்று பின்பற்றியது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navasathishkumar - MADURAI,இந்தியா
10-ஆக-202112:25:18 IST Report Abuse
navasathishkumar போன் ஒட்டு எல்லாம் பிரச்னையாப்பா ...சரி அப்படி என்ன உங்க சீக்ரட் வெளிய வந்துச்சு ...நம்ம இந்தியாவில் படிச்சவன் அதிகம் அதிலும் இப்ப எலெக்ட்ரானிக்ஸ் என்ஜீனியர் போய் ரோபோடிக்ஸ் படிச்சிட்டு இருக்காங்க ...
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
04-ஆக-202122:27:29 IST Report Abuse
s t rajan அமளி செயவோர்களை உடனடியாக, நிரந்தரமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குங்கள். பென்ஷன், மற்றும் இலவச இனாம்களை ரத்து செய்யுங்கள். இவர்கள் எதிர் கட்சிக்காரர்கள் அல்ல. நம் நாட்டு மக்களின் வரிப்பணத்தை ஸ்வாஹா செய்யும் எதிரிக் கட்சிகள். அது மட்டுமின்றி இன்னும் 5 ஆண்டுகளுக்கு எல்லா தர்ணா, உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவற்றை தடை செய்யுங்கள். கோராணாவை விடக் கொடிய இந்த எதிரிக் கட்சிகளைத் செய்யுங்கள். Military discipline வரும் வரை இக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தாதீர்கள். நாட்டின் நலன் கருதி உடனடியாக இவைகளை செயலாக்குங்கள். இந்திரா சுயநலத்திற்காக emergency கொண்டுவந்தார். நீங்கள் நாட்டுநலனுக்காக அவசர நிலை ப்ரகடனம் கொண்டு வாருங்கள். மக்கள் உங்கள் பக்கம்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-ஆக-202121:51:20 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் மறைந்துவிட்டன பிஜேபியும் இதைச் செய்திருக்கிறது என்றாலும் இதை துவக்கியது ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X