ராணி 2ம் எலிசபெத்தைக் கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
தெற்கு லண்டன்: மக்களாட்சி மலர்ந்த பின்னும் அரச குடும்பத்தை மிகவும் மரியாதையாக நடத்தும் ஒரே நாடு பிரிட்டன். பிரிட்டன் அரசால் பெரிதும் மதிக்கப்படுவது பிரிட்டன் அரச குடும்பம். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் உள்ளது போலவே மேல்சபை, கீழ் சபை என அனைத்தும் இருந்தாலும் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய ராணி இரண்டாம் எலிசபெத் இறுதியாக கையெழுத்திட்டால்தான் அது

தெற்கு லண்டன்: மக்களாட்சி மலர்ந்த பின்னும் அரச குடும்பத்தை மிகவும் மரியாதையாக நடத்தும் ஒரே நாடு பிரிட்டன். பிரிட்டன் அரசால் பெரிதும் மதிக்கப்படுவது பிரிட்டன் அரச குடும்பம். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் உள்ளது போலவே மேல்சபை, கீழ் சபை என அனைத்தும் இருந்தாலும் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய ராணி இரண்டாம் எலிசபெத் இறுதியாக கையெழுத்திட்டால்தான் அது சட்டமாகும்.



latest tamil news




ராணி இரண்டாம் எலிசபெத் உயிருக்கு அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்பது பலருக்குத் தெரியாத விஷயம். இவருக்கு எதிரானவர்கள் இவரை கொல்ல திட்டமிட வாய்ப்புள்ளதால் 90 வயதைக் கடந்த ராணிக்கு இன்னும் பாதுகாப்பு வளையம் தளர்த்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓர் நபர் பிரிட்டன் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார்.

சுதேஷ் அம்மான் என்கிற 20 வயது இஸ்லாமிய வாலிபர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து 2 பிரிட்டன் குடிமக்களை கத்தியால் தாக்கியுள்ளார். இஸ்லாமியரான இவர் இந்த தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்னரே சிறையிலிருந்து விடுதலை ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவர் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். இவரை விடுவிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரித்தது. இந்த நிலையில் இவர் லண்டன் நீதிமன்ற உத்தரவில் விடுவிக்கப்பட்டார்.

வெளியே வந்த அம்மான் ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய ஆர்வம் காட்டினார். ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல தான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காக தான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றும் முன்னதாக இவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.


latest tamil news



தற்போது இவர் பிரிட்டன் சிறப்பு புலனாய்வு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டனை அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாதியான அம்மான் கொல்லப்பட்டது நான் நாட்டில் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
04-ஆக-202117:01:30 IST Report Abuse
S.kausalya உலகிலேயே இரண்டு ராணிகள் மட்டும் செயல் இழக்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டு ஒன்று சீட்டுக்கட்டில் இருக்கும் ராணி மற்றொன்று எலிசபெத் ராணி.எனவே பிரிட்டிஷார் ராணியின் மதிப்பை குறைக்க அனுமதிக்கமாட்டார்கள் அவருக்கு ஏதேனும் பங்கம் நேர்ந்தால் சுட்டு விடுவார்கள் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
04-ஆக-202110:42:45 IST Report Abuse
தத்வமசி இந்த போக்கை அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வன்மையாக கண்டிக்க வேண்டும். இவர்களை போன்றவர்களால் உலகில் அச்சுறுத்தல்கள் அதிகமாகி வருகிறது.
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
04-ஆக-202109:26:47 IST Report Abuse
W W தன் வினை தன்னை சுடும், உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் பாவிகள் இனியாவது அவர்களை வெய்க்க வேண்டிய இடத்திலேயேயே வைத்திருந்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X