அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் அதிக மேம்பாலங்கள்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:தென் மாவட்டங்களில், அதிக மேம்பாலங்கள் கட்டும் வகையில், பட்ஜெட்டில் முக்கியத்துவம் தர, நெடுஞ்சாலைத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர்பழனிசாமி., கட்டுப்பாட்டில், நெடுஞ்சாலைத் துறை இருந்தது.இதனால், துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட்டில்

சென்னை:தென் மாவட்டங்களில், அதிக மேம்பாலங்கள் கட்டும் வகையில், பட்ஜெட்டில் முக்கியத்துவம் தர, நெடுஞ்சாலைத் துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில், முன்னாள் முதல்வர்பழனிசாமி., கட்டுப்பாட்டில், நெடுஞ்சாலைத் துறை இருந்தது.இதனால், துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நெடுஞ்சாலைத் துறைக்கான நிதி ஒதுக்கீடு, பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க., அரசின், கடைசி பட்ஜெட்டில், இத்துறைக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியில், பல்வேறு மாவட்டங்களில் மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் அதிகளவில் கட்டப்பட்டன.
பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மட்டுமின்றி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், மேம்பாலங்கள் கட்டுவதற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அதேநேரத்தில், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், பெரிய அளவில் மேம்பாலங்கள் கட்டப்படவில்லை; சாலை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இதனால், இம்மாவட்டங்களின் சாலை போக்குவரத்து, 10 ஆண்டுகள் பின்னோக்கி போய் விட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நிலையில், இம்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X