அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கேரள அரசுடன் விரைவில் நதி நீர் பேச்சு'

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை :''கேரள அரசுடனான நதி நீர் பேச்சு, அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் நடக்கும்,'' என, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் தி.மு.க., பங்கேற்காததால், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்ததாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்கு, அவர்கள் அழைப்பிதழை மட்டும் அனுப்பி
'கேரள அரசு  விரைவில் , நதி நீர் பேச்சு'

சென்னை :''கேரள அரசுடனான நதி நீர் பேச்சு, அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் நடக்கும்,'' என, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் தி.மு.க., பங்கேற்காததால், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணித்ததாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா படத் திறப்பு விழாவுக்கு, அவர்கள் அழைப்பிதழை மட்டும் அனுப்பி வைத்தனர். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எதிர்க்கட்சி தலைவரை மேடையில் அமர வைக்க வேண்டும்.

அவர்கள் ஒத்துழைப்போடு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என, முதல்வர் நினைத்தார்.

எனவே, முதல்வர் உத்தரவின்படி, இ.பி.எஸ்.,சை தொடர்பு கொண்டு, 'ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் அமரும் வரிசையிலேயே அவருக்கும் இடம் ஒதுக்கப்படும். வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும்' எனக் கூறி அழைப்பு விடுத்தேன். அவர், அனைவரிடமும் கலந்து ஆலோசித்து கூறுவதாகக் கூறினார். ஆனால், பங்கேற்காததை என்னிடம் கூறாமல், சட்டசபை செயலரிடம் கூறியுள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றதை முழு மனதோடு வரவேற்கிறேன். 'உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்' என, கர்நாடக முதல்வர் கூறுவது ஏற்புடையது அல்ல. அவரது தந்தை பொம்மை, கருணாநிதி மீது மிக அன்பு கொண்டவர். சட்டசபையை கலைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி தந்தவர்.


அழுத்தம் கொடுத்தேன்



எனவே, கர்நாடக முதல்வர் இளம் துடிப்போடு பேசி உள்ளார். விபரம் தெரிந்த பின், அவரே தன் முடிவை கைவிடுவார் என நம்புகிறேன்.மார்க்கண்டேய நதியில் அணை கட்டும் போதே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதுவரை, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சில நாட்களுக்கு முன், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தபோது, நடுவர் மன்றம் அமைக்க அழுத்தம் கொடுத்தேன்.அவர் யோசிப்பதாக தெரிவித்தார். இதுபோல் தான் ஒவ்வொரு திட்டமும், மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.உலக வங்கி வழங்கிய 1,300 கோடி ரூபாயில், கீழ்பவானி கால்வாய்கள் புனரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின்படி, தண்ணீர் தடையின்றி வேகமாக செல்ல வசதியாக, இரு பக்க கரைகள் மற்றும் தரைகள், 'கான்கிரீட்'டால் அமைக்கப்பட வேண்டும். இதற்கு விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். தரையில் சிமென்ட் தளம் போடுவதை தவிர்த்து, திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இது குறித்து விவசாயிகளிடம், மாவட்ட அமைச்சர், பொதுப்பணித் துறை செயலர், மாவட்ட கலெக்டர் பேச்சு நடத்த கூறப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் 1,300 கோடி ரூபாய் உலக வங்கிக்கு திரும்ப சென்று விடும்.


பேச்சு நடக்கும்



கேரள - தமிழக நதி நீர் பேச்சு தொடர்பாக, இரு மாநில அரசு அமைத்த குழு, இரண்டு அமர்வு பேசி உள்ளது. அடுத்த அமர்வு கேரளாவில் நடக்க வேண்டும். இரு மாநில பொதுப்பணித் துறை செயலர்களும் விரைவில் சந்தித்து பேச தேதியை முடிவு செய்வர். அதன்பின் பேச்சு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
04-ஆக-202119:11:38 IST Report Abuse
vbs manian தலைவரோடு நெருக்கமாய் இருந்தவர். நீர் வள துறை பற்றி நிஜமாகவே விஷயம் தெரிந்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஏன் இவரால் ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் வீ ணாகும் மழைநீரை தகுந்த முறையில் சேமித்து வைத்தால் யாரிடமும் கைய நீட்ட வேண்டாம் என்று நீர் வளத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். கட்சி அரசியலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு ஏதாவது உபயோகமாக இவர் செய்வாரா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஆக-202119:09:05 IST Report Abuse
sankaseshan மந்திரி துரை போனா அவரு மதிப்பு கொறஞ்சிடுமா
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-ஆக-202119:06:24 IST Report Abuse
vbs manian இவர் மகனும் அமைச்சர் ஆகி பேசிக்கொண்டிருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X