அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சிகள் விரிவாக்கமா? அமைச்சர் கருப்பன் பதில்!

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''மாநகராட்சிகளை விரிவுப்படுத்துவது குறித்து, முதல்வர் முடிவு செய்வார்,'' என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு, 300 ரூபாய் கூலி கொடுக்கப்படும் என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர்

சென்னை:''மாநகராட்சிகளை விரிவுப்படுத்துவது குறித்து, முதல்வர் முடிவு செய்வார்,'' என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு, 300 ரூபாய் கூலி கொடுக்கப்படும் என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றுவார். மாநகராட்சிகளுக்கு அருகில் உள்ள சில ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றை இணைத்து, மாநகராட்சியை விரிவுப்படுத்துவது குறித்து, முதல்வர் முடிவு செய்வார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தமாக எடுத்து பணிகளை செய்யாமல், சிலர் காலதாமதம் செய்து வருகின்றனர். விரைவாக பணியை முடிக்காவிட்டால் டெண்டர் ரத்து செய்யப்படும். 'ஜல் ஜீவன்' திட்டத்தில் பணிகள் தரமாக இல்லை என, புகார்கள் வந்துள்ளன. மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நிதி நிலையை பொறுத்து, அந்த திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து, முதல்வர் முடிவு செய்வார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
04-ஆக-202109:31:43 IST Report Abuse
R.RAMACHANDRAN மஹாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு சட்டப்படி உடல்தகுதி உள்ளோர் ஏழு மணி நேரம் உடல் ஊனமுற்றோர் நான்கு மணி நேரம் பணி செய்தால் மட்டுமே முழு ஊதியம் வழங்க வேண்டும்.பத்து மணிக்கு கூடி பனிரெண்டு மணிக்கு களைந்து செல்வதற்கு ரூபாய் இருநூறு வழங்கப்படுகிறது. அரசியல்வாதிகள் தேர்தல்களில் வாக்குகள் சேகரிக்கவும் அதிகார வர்கம் கிராம சபை நடத்தாமலேயே நடத்தியதாக கையொப்பம் பெற்று ஊழல் செய்யவும் இந்த சட்ட விரோத மோசடியை கண்டு கொள்வது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X