எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., 90 - அ.தி.மு.க., 80 : உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 90 சதவீதம் இடங்களில், தி.மு.க., போட்டியிட உள்ளது. பா.ம.க., - பா.ஜ.,வுக்கு, தலா, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 80 சதவீதம் இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம்,
 தி.மு.க., 90 - அ.தி.மு.க., 80  : உள்ளாட்சி தேர்தல், கட்சிகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 90 சதவீதம் இடங்களில், தி.மு.க., போட்டியிட உள்ளது. பா.ம.க., - பா.ஜ.,வுக்கு, தலா, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 80 சதவீதம் இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலுார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.தற்போது, வார்டு வரையறை பணிகள் முடிந்து விட்டதால், செப்., மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் தயாராகி உள்ளன.


கோரிக்கைசமீபத்தில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கு கணிசமான அளவில் பங்கீடு அளிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தார்.
தேர்தல் நடைபெறவுள்ள, ஒன்பது மாவட்டங்களில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர, மற்ற, ஏழு மாவட்டங்களில், காங்கிரசுக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லை என்று, தி.மு.க., கருதுகிறது. எனவே, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம், 10 சதவீத இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள, 90 சதவீதம் இடங்களில், தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு மாவட்ட அளவில் இடப்பங்கீடு கொடுக்க, மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டு உள்ளது.

அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., போன்ற சில கட்சிகளின் வேட்பாளர்களை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட செய்ய வேண்டும் என்றும், மா.செ.,க்களுக்கு தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதை, அக்கட்சிகள் ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.அ.தி.மு.க.,வில், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணியை தொடர, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், அன்வர்ராஜா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றவர்கள், பா.ஜ., கூட்டணியை விரும்புகின்றனர்.எனவே, உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நீடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வை விட, பா.ஜ.,வுக்கு குறைவான தொகுதிகளே அளிக்கப்பட்டன.
தற்போது, அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., தயவு தேவைப்படுவதால், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுக்கும் சமமாக தலா, 10 சதவீதம் இடங்களை ஒதுக்க திட்டமிட்டு உள்ளது. எஞ்சிய, 80 சதவீதம் இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட உள்ளது.


விருப்பம்கூட்டணி கட்சிகள், இடப்பங்கீடு தொடர்பான பேச்சை, மாவட்ட அளவில் நடத்தவே, அ.தி.மு.க., மேலிடமும் விரும்புகிறது. ஆனால், மாவட்ட அளவில் பேச்சு நடத்த வேண்டாம் என்றும், மேலிடத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், அ.தி.மு.க., மேலிடத்துடன், கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி, பங்கீட்டை முடிவு செய்த பின், மாவட்ட அளவில், எந்தெந்த இடங்கள் என்ற பேச்சு நடத்த வாய்ப்புள்ளது. இது தொடர்பாக., அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v j antony - coimbatore,இந்தியா
04-ஆக-202120:34:41 IST Report Abuse
v j antony மாநிலம் முழுவதும் லாக் டவுன் போட்டு கடைகள் அடைத்துவிட்டு தேர்தல் மட்டும் நடத்துவது நியாயமில்லை வைரஸ் பரவலுக்கு அரசே துணை போவது பின் அனைவரின் வாழ்வாதாரங்களை அழிப்பது கண்டிக்கத்தக்கது
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஆக-202113:07:02 IST Report Abuse
Pugazh V வெறும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல். அதற்கு என்ன இத்தனை ஆர்ப்பாட்டம் என்று நினைக்காதீர்கள். எப்படியாவது தமிழகத்தில் ஒரு மதக்கலவரம் அல்லது இனக்கலவரம் அல்லது ஜாதிச்சண்டை உருவாக்க பாஜக குழு அமைக்கிறது. தமிழக மக்கள் கவனிக்க. இந்த குழு வன்முறை, பிரிவினைவாதம், மதவாதம் இவற்றை முன்னிறுத்தி பேசும். எழுதும். கலவரம் தூண்டும் விதத்தில் செயல்படும். தமிழக த்தின் அமைதியை நிலை நாட்ட மக்கள் இந்த குழுவிடம் கவனமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
04-ஆக-202110:07:02 IST Report Abuse
Tamilan ஊழலுக்கும் அராஜகத்திற்கும் மோசடிகளுக்கும் எதிராகவும் அரசுக்கு எதிராகவும் அஇஅதிமுக கூட்டணி என்ன செய்ய முடியும்... வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்...கடந்த காலம் போலவே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X