தி.மு.க., 90 - அ.தி.மு.க., 80 : உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., 90 - அ.தி.மு.க., 80 : உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (3)
Share
ஊரக உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 90 சதவீதம் இடங்களில், தி.மு.க., போட்டியிட உள்ளது. பா.ம.க., - பா.ஜ.,வுக்கு, தலா, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 80 சதவீதம் இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட உள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம்,
 தி.மு.க., 90 - அ.தி.மு.க., 80  : உள்ளாட்சி தேர்தல், கட்சிகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 90 சதவீதம் இடங்களில், தி.மு.க., போட்டியிட உள்ளது. பா.ம.க., - பா.ஜ.,வுக்கு, தலா, 10 சதவீத இடங்களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 80 சதவீதம் இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலுார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை.தற்போது, வார்டு வரையறை பணிகள் முடிந்து விட்டதால், செப்., மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள் தயாராகி உள்ளன.


கோரிக்கைசமீபத்தில், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கு கணிசமான அளவில் பங்கீடு அளிக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தார்.
தேர்தல் நடைபெறவுள்ள, ஒன்பது மாவட்டங்களில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர, மற்ற, ஏழு மாவட்டங்களில், காங்கிரசுக்கு பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லை என்று, தி.மு.க., கருதுகிறது. எனவே, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம், 10 சதவீத இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள, 90 சதவீதம் இடங்களில், தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு மாவட்ட அளவில் இடப்பங்கீடு கொடுக்க, மாவட்ட செயலர்களுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டு உள்ளது.

அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., போன்ற சில கட்சிகளின் வேட்பாளர்களை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட செய்ய வேண்டும் என்றும், மா.செ.,க்களுக்கு தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது. இதை, அக்கட்சிகள் ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.அ.தி.மு.க.,வில், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., கூட்டணியை தொடர, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், அன்வர்ராஜா போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றவர்கள், பா.ஜ., கூட்டணியை விரும்புகின்றனர்.எனவே, உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நீடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வை விட, பா.ஜ.,வுக்கு குறைவான தொகுதிகளே அளிக்கப்பட்டன.
தற்போது, அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., தயவு தேவைப்படுவதால், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுக்கும் சமமாக தலா, 10 சதவீதம் இடங்களை ஒதுக்க திட்டமிட்டு உள்ளது. எஞ்சிய, 80 சதவீதம் இடங்களில், அ.தி.மு.க., போட்டியிட உள்ளது.


விருப்பம்கூட்டணி கட்சிகள், இடப்பங்கீடு தொடர்பான பேச்சை, மாவட்ட அளவில் நடத்தவே, அ.தி.மு.க., மேலிடமும் விரும்புகிறது. ஆனால், மாவட்ட அளவில் பேச்சு நடத்த வேண்டாம் என்றும், மேலிடத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், அ.தி.மு.க., மேலிடத்துடன், கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி, பங்கீட்டை முடிவு செய்த பின், மாவட்ட அளவில், எந்தெந்த இடங்கள் என்ற பேச்சு நடத்த வாய்ப்புள்ளது. இது தொடர்பாக., அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது. - நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X