பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.கல்லுப்பட்டியில் ரோடு பணி ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி

Added : ஆக 03, 2021
Share
Advertisement
காரியாபட்டி : தினமலர் செய்தி எதிரொலியாக எஸ்.கல்லுப்பட்டியில் சாக்கடை,ரோடு அமைக்க ஆய்வு செய்த அதிகாரிகள் ,இதன் பணிக்காக உடனே நிதி ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடியது. ஆக்கிரமிப்பின் பிடியில் தெருக்கள் உள்ளதால் டூவீலர்களில் கூட செல்ல முடியவில்லை. எஸ்.கல்லுப்பட்டியில்

காரியாபட்டி : தினமலர் செய்தி எதிரொலியாக எஸ்.கல்லுப்பட்டியில் சாக்கடை,ரோடு அமைக்க ஆய்வு செய்த அதிகாரிகள் ,இதன் பணிக்காக உடனே நிதி ஒதுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

காரியாபட்டி எஸ்.கல்லுப்பட்டியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடியது. ஆக்கிரமிப்பின் பிடியில் தெருக்கள் உள்ளதால் டூவீலர்களில் கூட செல்ல முடியவில்லை. எஸ்.கல்லுப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரமுள்ள எஸ்.வெள்ளாகுளத்திற்கு செல்லும் ரோட்டில், ஒரு கி.மீ., துாத்திற்கு சாலை அமைக்காததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை குறித்து தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் மேகநாத ரொட்டி உத்தரவிட்டார்.

இதையடுத்து காரியாபட்டி பி.டி.ஓ., சிவகுமார், துணை பி.டி.ஓ., புவனேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரபாகரன், ஊராட்சி தலைவர் லட்சுமணன், பொறியாளர் மாரிமுத்து, ஊராட்சி செயலர் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டனர். சாக்கடை கட்ட ரூ 5.50 லட்சம், எஸ். வெள்ளா குளம் செல்லும் ரோட்டில் ஒரு கி.மீ., துாரத்திற்கு ரோடு அமைக்க ரூ .6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கலெக்டருக்கும், செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும் கிராமத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X