பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் இலவச அரிசி ரேஷனில் வழங்காததால் அதிருப்தி

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சிவகங்கை : ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதத்திற்கான இலவச அரிசிஇன்று வரை வழங்கப்படவில்லை, என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு 2021 மே முதல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ஒரு

சிவகங்கை : ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணமாக மத்திய அரசு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதத்திற்கான இலவச அரிசிஇன்று வரை வழங்கப்படவில்லை, என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு 2021 மே முதல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டுள்ளது.ஜூன் ஒதுக்கீட்டை அந்த மாதமே வழங்கவும், மே மாத ஒதுக்கீட்டை ஜூலையுடன் சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஜூன், ஜூலைக்கு மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கீடு செய்த தலா நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மே மாதத்திற்கான 5 கிலோ கூடுதல் அரிசி ரேஷன் கடைகளில் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X