பொது செய்தி

தமிழ்நாடு

இலவச 'அட்மிஷன்' அவகாசம் நீட்டிப்பு

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சென்னை:கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம்

சென்னை:கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பான, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், நலிவடைந்த பிரிவினருக்கு, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

இந்த கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில், ஜூலை, 5ல் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்றுடன் பதிவு முடியவிருந்தது.இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கருதி, அவகாசம், 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை, 73 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X