பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணிவதில் அலட்சியம் காட்டும் மக்கள்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில், அபராதம் விதிக்கும் நடைமுறை நீர்த்துப் போனதால், பெரும்பாலான பொதுமக்கள் அலட்சியத்துடன், 'மாஸ்க்' அணியாமல் சாலைகளில் நடமாடி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களிடையே, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கிறது. அதேசமயம்,

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில், அபராதம் விதிக்கும் நடைமுறை நீர்த்துப் போனதால், பெரும்பாலான பொதுமக்கள் அலட்சியத்துடன், 'மாஸ்க்' அணியாமல் சாலைகளில் நடமாடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களிடையே, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்கிறது. அதேசமயம், மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறை, ஒரு மாதமாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக, 40 முதல் 45 பேர் வரை கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எண்ணிக்கை எப்போது வேண்டுமானாலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் மாஸ்க் அணியாமல் பலரும் செல்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரை பொறுத்தவரையில், மூங்கில் மண்டபம், பிள்ளையார்பாளையம், கீரை மண்டபம், நகராட்சி அலுவலகம் போன்ற பகுதிகளில், மாஸ்க் அணியாத நபர்களிடம், 100 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது எந்த பகுதியிலும், அபராதம் விதிக்கும் ஊழியர்களை பார்க்க முடிவதில்லை. இதனால், மாஸ்க் அணிவதில் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.


விழிப்புணர்வு இல்லை

பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வும், பொறுப்பும் இல்லாத காரணத்தால், நகரில் பெரும்பாலான பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் சாலைகளில் செல்கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் நகர்நல அலுவலர் முத்து கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையை செய்து வருகிறோம். அபராதம் விதிப்பதற்காகவே, 36 பேரை நியமித்துள்ளோம். தற்போது கூட, கொரோனா தடுப்பு சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது. அபராதம் விதிப்பது கடுமையாக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X