பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் நாற்றுப்பண்ணை தொடக்கம்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மக்கள் பயன் பெறும் வகையில் தோட்டக்கலைத்துறை தேசிய ரூர்பன் திட்டம் மூலம் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பழமரக்கன்று, காய்கறி நாற்றுப்பண்ணையை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டத்தில் நேமம், தேவகோட்டை, கிளாதரி ஆகிய பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் நாற்றுப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பழ வகை மரக்கன்றுகள், காய்கறி

சிவகங்கை : சிவகங்கை மக்கள் பயன் பெறும் வகையில் தோட்டக்கலைத்துறை தேசிய ரூர்பன் திட்டம் மூலம் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பழமரக்கன்று, காய்கறி நாற்றுப்பண்ணையை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் நேமம், தேவகோட்டை, கிளாதரி ஆகிய பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் நாற்றுப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பழ வகை மரக்கன்றுகள், காய்கறி நாற்றுக்கள் தயார் செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.சிவகங்கை பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 2.5 ஏக்கர் நிலம் தோட்டக்கலைத்துறையினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தேசிய ரூர்பன் திட்டத்தில் 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.நாற்றுப்பண்ணையை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் 80 பேர் 500 பழவகை தாய் மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதிலிருந்து 6 மாதங்களுக்குப்பின் ஒட்டுக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.இதில் மா, சப்போட்டா, எலுமிச்சை, கொய்யா, பலா ஆகிய பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

காய்கறி நாற்றுகள் ஒரு ஆண்டில் 5 லட்சமும், 50 ஆயிரம் பழ மரக்கன்றுகள் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது.சிவகங்கை புற நகர் பகுதியில் உள்ள விவசாயிகள்,நகர்புற வீடுகளில் மாடி தோட்டம் அமைப்பவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அழகுமலை, உதவி இயக்குநர் சக்திவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X