பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்... கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
அன்னுார் வட்டாரத்தில், வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. முகாம்கள் நடக்கும் இடங்களில், ஜன சேவா அமைப்பினர், கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில், 10 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளனர். நேற்று கணேசபுரம் மற்றும் அன்னூரில் தடுப்பூசி முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு, ஜனசேவா அமைப்பின் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகி கேசவ நடராஜன்

அன்னுார் வட்டாரத்தில், வாரத்தில் இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. முகாம்கள் நடக்கும் இடங்களில், ஜன சேவா அமைப்பினர், கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில், 10 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளனர். நேற்று கணேசபுரம் மற்றும் அன்னூரில் தடுப்பூசி முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு, ஜனசேவா அமைப்பின் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகி கேசவ நடராஜன் உள்ளிட்டோர் கபசுர குடிநீர் வழங்கினர்.

கை கழுவுவது எப்படி?

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியை கல்பனா தலைமை வகித்தார். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள், கிருமி நாசினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கை கழுவும் முறை, தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
வனத்துறை அனுமதி தேவை

தோலம்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெயா, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:தோலம்பாளையத்திலிருந்து கோப்பனாரி வரை, வனப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வனப்பகுதிகளில், 12 மலை கிராமங்கள் உள்ளன. இந்த சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, மிக மோசமான நிலையில் உள்ளது.யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இரவில் இச்சாலை வழியாக வாகனங்களில் வருபவர்களுக்கு, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை தார் சாலையாக மாற்ற, வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் சின்னமலைக்கு அஞ்சலி
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் சார்பில், கருமத்தம்பட்டி நால்ரோட்டில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 216 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.மாநில தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தேவராஜ் ஆகியோர் கொடியேற்றி வைத்து தீரன் சின்னமலை உருவ படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.கிழக்கு மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய மேல்நிலைத் தொட்டி

காரமடை அடுத்த காளம்பாளையம் ஊராட்சியில் உள்ள சாமக்கால் நகரில், 150 குடும்பங்கள் உள்ளன. குடியிருப்புகள் பெருகியதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.காளம்பாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி கூறுகையில், "சாமக்கால் நகரில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி உள்ளது. இதிலிருந்து ஒருநாள் விட்டு ஒருநாள், 45 நிமிடம் மட்டுமே குடிநீர் வினியோகிக்க முடிகிறது. இங்கு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்ட, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஓரிரு வாரத்தில் பணிகள் துவங்கப்படும்" என்றார்.

ஆசிரியர் கூட்டணி விழா
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், 38ம் ஆண்டு இயக்க நாள் விழா, அன்னுார் தெற்கு துவக்கப்பள்ளி முன் நடந்தது.மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பையன் கொடியேற்றி பேசுகையில், ''ஏழை, எளிய, நடுத்தர மக்களின் ஒரே நம்பிக்கையாக அரசு பள்ளிகள் உள்ளன. இவை, சிறந்த உள்கட்டமைப்புடன் செயல்பட அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்,'' என்றார். கூட்டணியின் வட்டாரத் தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ரபியா பேகம், மாவட்ட துணைச்செயலாளர் வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

கடைகள் அடைப்பு; கண்காணிப்பு

ஊரடங்கு உத்தரவை அடுத்து, மேட்டுப்பாளையம் தாலுகாவில், நேற்று மாலை, 5:00 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, காலை, 10:00லிருந்து மாலை, 5:00 மணி வரை மட்டுமே, கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நகரில் நகராட்சி அதிகாரிகளும், சிறுமுகை, காரமடை ஆகிய பேரூராட்சிகளில், பேரூராட்சி அலுவலர்களும் ஆட்டோவில், அனைத்து கடைகளை அடைக்கும்படி அறிவுறுத்தி, அறிவிப்பு செய்தனர். தொடர்ந்து, 5:00 மணிக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

வனப்பகுதியில் தடுப்பணைகள்
காரமடை வனப்பகுதி, 11 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. வனவிலங்குகள், மலைகளை கடந்து, பவானி ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க வந்து செல்கின்றன. வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதியிலேயே தடுப்பணைகள் கட்டப்படுகின்றன.
காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறுகையில், "இதுவரை, 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், காரமடை வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டு முள்ளி, பரளிக்காடு வனப்பகுதியில், 3 இடங்களில் தலா, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஒன்றரை மீட்டர் உயரம், 10 மீட்டர் அகலத்தில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது" என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X