பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா

Added : ஆக 03, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் சீதளி தெப்பக்குள படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள் பலரும் பிரார்த்தித்து தாலிப் பெருக்கி கட்டினர்.திருப்புத்துார் சீதளி குளத்திலுள்ள பிராமணப்படித்துறையில் நேற்று காலை முதல் தம்பதியர் பலர் வந்தனர். தாலிக் கயிற்றை பிரித்து புதுமஞ்சள் கயிறு சேர்த்து பெரியவர்கள் எடுத்து கொடுக்க தாலிப்பெருக்கி

திருப்புத்துார் : திருப்புத்துார் சீதளி தெப்பக்குள படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள் பலரும் பிரார்த்தித்து தாலிப் பெருக்கி கட்டினர்.

திருப்புத்துார் சீதளி குளத்திலுள்ள பிராமணப்படித்துறையில் நேற்று காலை முதல் தம்பதியர் பலர் வந்தனர். தாலிக் கயிற்றை பிரித்து புதுமஞ்சள் கயிறு சேர்த்து பெரியவர்கள் எடுத்து கொடுக்க தாலிப்பெருக்கி கட்டினர்.

கருணாம்பிகை கணேசன் கூறுகையில், நாங்கள் திருமணமான ஆண்டு முதல் வருகிறோம். சீதளி தீர்த்தத்தில் ஆடிப் பெருக்கு அன்று பிரார்த்தித்து வருகிறோம். குழந்தைகளுடன் வந்து அவர்களையும் பிரார்த்திக்க வைத்து, அதன் பின்னர் வீட்டிற்கு சென்று பூஜையறையில் தாலிப்பெருக்கிக் கட்டுவோம். இது மனதிற்கு நிறைவாகவும், மகிழ்ச்சியையும் தருகிறது' என்றார்.

காரைக்குடி

காரைக்குடி கோயில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் மாங்கல்ய பலம் பெற மஞ்சள் கயிறு மாற்றி வழிபாடு செய்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயில்களுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோயில்களுக்கு வெளியே மஞ்சள்கயிறு மாற்றினர்.கோயில் தெப்பத்தில் மகாலட்சுமியை வழிபடும் நோக்கில் பால், தேன், சர்க்கரை வைத்து வழிபாடு செய்து மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் முன்பு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். வாசல் முன்பு நின்று மஞ்சள் கயிறு மாற்றிய பெண்களை வீட்டிற்கு சென்று வீட்டில் அமர்ந்து கயிறு மாற்ற அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X