அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க.,வினர் புத்திசாலிகள்'

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை :''மக்களை திசை திருப்பி ஏமாற்றுவதில், தி.மு.க.,வினர் புத்திசாலிகள்,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வரலாற்றில் இடஒதுக்கீடு என்று எடுத்துக் கொண்டால், அது அ.தி.மு.க., தான். 1980ல், 30 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்தியது, எம்.ஜி.ஆர்., தான்.அதன்பின், 1990ல் மண்டல் கமிஷன், 50 சதவீதம் இட ஒதுக்கீடு
மக்களை ஏமாற்று, தி.மு.க., புத்திசாலிகள்

சென்னை :''மக்களை திசை திருப்பி ஏமாற்றுவதில், தி.மு.க.,வினர் புத்திசாலிகள்,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:வரலாற்றில் இடஒதுக்கீடு என்று எடுத்துக் கொண்டால், அது அ.தி.மு.க., தான். 1980ல், 30 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்தியது, எம்.ஜி.ஆர்., தான்.

அதன்பின், 1990ல் மண்டல் கமிஷன், 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைத்தது. அப்போது, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது ஜெயலலிதா.அதன்பின், முதல்வராக இருந்த இ.பி.எஸ்., டில்லி செல்லும் போதெல்லாம், பிற்படுத்தப்பட்டோருக்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வற்புறுத்தினார்.அத்துடன், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், மற்ற கட்சிகள் இணைந்து கொண்டன. எங்களை பொறுத்தவரை, அகில இந்திய அளவில், 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் நிலைப்பாடு. சமூக நீதி என்றால், அ.தி.மு.க., தான்.இதில், தி.மு.க., சிறு துரும்பைக் கூட எடுத்து போடாத நிலையில், நாங்கள் கொண்டு வந்த, 27 சதவீதம் மற்றும் 69 சதவீதத்தை சொந்தம் கொண்டாடுவது எப்படி? மக்களை திசை திருப்பி ஏமாற்றுவதில், தி.மு.க.,வினர் புத்திசாலிகள். இட ஒதுக்கீடுக்கு முதலில் விதை போட்டு, தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தது, நாங்கள் தான்.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-ஆக-202121:47:29 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் உண்மையைத்தானே பேசியிருக்கிறார் ?
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
04-ஆக-202114:31:03 IST Report Abuse
unmaitamil Please don't repeat the same comment
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
04-ஆக-202114:29:53 IST Report Abuse
unmaitamil Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X