பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் ஆசிர்வாதம் இருந்தால்...

Added : ஆக 03, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:கணியூரில் குட்டையை சமன்படுத்தி, வேலி அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. குட்டைக்கு பட்டா கொடுத்த அதிகாரிகள் யார் என, பொதுமக்கள் ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட, குமார் நகர் பகுதியில், மணியகாரர் குட்டை உள்ளது. இக்குட்டையில் தேங்கும் நீரால், சுற்றுவட்டார பகுதிகள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில்,
  அதிகாரிகள் ஆசிர்வாதம் இருந்தால்...

கருமத்தம்பட்டி:கணியூரில் குட்டையை சமன்படுத்தி, வேலி அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. குட்டைக்கு பட்டா கொடுத்த அதிகாரிகள் யார் என, பொதுமக்கள் ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட, குமார் நகர் பகுதியில், மணியகாரர் குட்டை உள்ளது. இக்குட்டையில் தேங்கும் நீரால், சுற்றுவட்டார பகுதிகள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று, குட்டையின் ஒரு பகுதியை சிலர் சமன்படுத்தி, கல் துாண் நட்டி, வேலி அமைக்க முயற்சி செய்தனர்.தகவல் அறிந்த ஊராட்சித் தலைவர் வேலுசாமி மற்றும் பொதுமக்கள் சென்று பணிகளை தடுக்க முயற்சித்தனர். 'எங்களிடம் பட்டா உள்ளது; யாரும் தடுக்க முடியாது' என, எதிர்தரப்பினர் கூறியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஊராட்சி தலைவர் வேலுசாமி, கருமத்தம்பட்டி போலீசாரிடம் அளித்த புகார் மனு விபரம்: கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகரில் க.எண் 244ல் மணியகாரர் குட்டை உள்ளது. 1909ஆம் ஆண்டு கிராம கூட்டு வரைபடத்தில் நீர்நிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நீர்நிலையின் ஒரு பகுதி கரையைச் சமன்படுத்தி, முள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களிடம் பட்டா இருப்பதாகக் கூறி, பணியை தொடர்கின்றனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு பணியை நிறுத்தி, நீர்நிலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,'நீர் நிலையை யாரும் ஆக்கிரமிக்க விடமாட்டோம். அவர்களுக்கு யார் பட்டா வழங்கியது என, விசாரிக்க வேண்டும். அதிகாரிகளின் துணையின்றி இது நடக்காது. கலெக்டரிடம் இதுகுறித்து புகார் அளிக்க உள்ளோம். உரிய தீர்வு கிடைக்காவிட்டால், கோர்ட்டில் முறையீடு செய்வோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X