ஏரியில் விழுந்தது ராணுவ ஹெலிகாப்டர்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரஞ்சித் சாகர் ஏரியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்தோரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளன. ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரஞ்சித் சாகர் அணை ஏரி உள்ளது; இது பஞ்சாபின் பதான்கோட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளது.இந்த ஏரிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ராணுவத்துக்கு சொந்த மான ஹெலிகாப்டர்
 ஏரியில் விழுந்தது ராணுவ ஹெலிகாப்டர்

ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரஞ்சித் சாகர் ஏரியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்தோரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரஞ்சித் சாகர் அணை ஏரி உள்ளது; இது பஞ்சாபின் பதான்கோட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ளது.இந்த ஏரிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ராணுவத்துக்கு சொந்த மான ஹெலிகாப்டர் பறந்து வந்தது.அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி வந்து, ஏரியில் விழுந்து நொறுங்கியது.

இதை அப்பகுதியில் வசித்த மக்கள் பார்த்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு பேர் இருந்ததாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.ஹெலிகாப்டர் விழுந்த இடம் 200 அடி ஆழம் உடையது. அங்கிருந்து 'ஹெல்மட்', இரண்டு பெரிய பைகள் மற்றும் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பயணம் செய்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X