பொது செய்தி

தமிழ்நாடு

கலப்பு தடுப்பூசி: நிபுணர் குழு ஆய்வு

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :ஒருவருக்கு, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை மாற்றி மாற்றி அளிப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் இதில் முக்கிய முடிவெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு 'டோஸ்'கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியும்
கலப்பு தடுப்பூசி  நிபுணர் குழு ஆய்வு

புதுடில்லி :ஒருவருக்கு, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை மாற்றி மாற்றி அளிப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் இதில் முக்கிய முடிவெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இரண்டு 'டோஸ்'



கொரோனா வைரசுக்கு எதிராக நம் நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியும் போடப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரே நிறுவனம் தயாரித்த இரண்டு 'டோஸ்' தடுப்பூசி வழங்கப்படுகிறது.இந்நிலையில் இரண்டு 'டோஸ்'களில் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை மாற்றி மாற்றி அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாற்றி மாற்றி அளிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இவ்வாறு கலந்து தருவது குறித்து ஆய்வு செய்ய, தமிழகத்தின் வேலுாரில் உள்ள சி.எம்.சி., எனப்படும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி அனுமதி கேட்டு உள்ளது.


ஆலோசனை கூட்டம்



இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கொரோனா பணிக் குழு ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் - வி மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இவ்வாறு மாறி மாறி அளிப்பதற்கான அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு நடக்கிறது. இதன்படி முதல் 'டோஸ்' கோவிஷீல்டு போட்டால், இரண்டாவது டோஸாக ஸ்புட்னிக் - வி போட்டுக் கொள்ளலாம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
04-ஆக-202111:21:46 IST Report Abuse
B. இராமச்சந்திரன் சவூதியில் இவ்வாறு கலப்பு தடுப்பூசி போடப்படுகிறது... முதல் டோஸ் ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனிக்கா(கோவிஷீல்டு) போடப்பட்டவர்களுக்கும் இரண்டாவது பைசர் தடுப்பூசி போடப்படுகிறது.. நானும் சவுதியில் அவ்வாறே போட்டுக்கொண்டேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X