பொது செய்தி

தமிழ்நாடு

4 டாக்டர் பணியிடத்திற்கு 147 பேர் நேர்காணல்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில், நான்கு பல் டாக்டர்கள் பணியிடத்திற்கு, 147 பேருக்கு, நேர்காணல் நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில், சைதாப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளுக்கு, தலா, ஒரு பல் மருத்துவர் என, நான்கு பேர், தற்காலிகமாக, நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு,

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகளில், நான்கு பல் டாக்டர்கள் பணியிடத்திற்கு, 147 பேருக்கு, நேர்காணல் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சைதாப்பேட்டை, ஈஞ்சம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளன. இம்மருத்துவமனைகளுக்கு, தலா, ஒரு பல் மருத்துவர் என, நான்கு பேர், தற்காலிகமாக, நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு, மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. 147 பல் டாக்டர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் ஜீவா, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் ஆகியோர், கலெக்டர் அலுவலத்தில், பல் டாக்டர்களிடம், நேர்காணல் நடத்தினர்.இந்த நேர்காணலில், 100க்கும் மேற்பட்ட, பல் டாக்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X