பொது செய்தி

தமிழ்நாடு

தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தல்

Added : ஆக 03, 2021
Share
Advertisement
அன்னுார்;தமிழில் கையொப்பமிட அலுவலர்களுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அறிவுறுத்தினார்.தமிழ் வளர்ச்சித் துறையின் மாவட்ட துணை இயக்குனர் புவனேஸ்வரி, ஆட்சிமொழி செயலாக்கம் குறித்து, அன்னுார் ஒன்றியத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், நேற்று, ஆய்வு செய்தார்.சார் பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் வருகை பதிவேடு, ஆவணங்களில்
 தமிழில் கையொப்பமிட அறிவுறுத்தல்

அன்னுார்;தமிழில் கையொப்பமிட அலுவலர்களுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அறிவுறுத்தினார்.தமிழ் வளர்ச்சித் துறையின் மாவட்ட துணை இயக்குனர் புவனேஸ்வரி, ஆட்சிமொழி செயலாக்கம் குறித்து, அன்னுார் ஒன்றியத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், நேற்று, ஆய்வு செய்தார்.சார் பதிவாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் வருகை பதிவேடு, ஆவணங்களில் அதிகாரிகளின் குறிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, "கண்டிப்பாக தமிழில் கையொப்பமிட வேண்டும். அலுவலர்கள் ஆவணங்களை ஆய்வு செய்து குறிப்பு எழுதும் போதும், தமிழிலேயே எழுத வேண்டும்" என்றார். துணை இயக்குனர் கூறுகையில், "அன்னுார் பேரூராட்சி அலுவலகத்தில், வருகைப் பதிவேடு உள்பட பெரும்பாலான பதிவேடுகளை முழுமையாக தமிழிலேயே வைத்துள்ளனர்" என்றார். ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X