பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலையில் அதிக வருமானம் பெற ஆலோசனை

Added : ஆக 03, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே பண்ணை பள்ளி துவக்க விழா நடந்தது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'அட்மா' திட்டத்தில், 'நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' என்னும் தலைப்பில், பண்ணைப் பள்ளி துவக்க விழா செல்லப்பம்பாளையத்தில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர் ரமா பேசுகையில்,

அன்னுார்:அன்னுார் அருகே பண்ணை பள்ளி துவக்க விழா நடந்தது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'அட்மா' திட்டத்தில், 'நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை' என்னும் தலைப்பில், பண்ணைப் பள்ளி துவக்க விழா செல்லப்பம்பாளையத்தில் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முனைவர் ரமா பேசுகையில், "நிலக்கடலை சாகுபடியில், புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. விவசாயிகள் இந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூல் பெற்று, கூடுதல் வருமானம் பெறலாம்" என்றார். விவசாயிகளுக்கு, பண்ணை பள்ளி குறித்து களத்தில் நேரடியாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வேளாண் அலுவலர் சுகன்யா பேசுகையில், "சொட்டு நீர் பாசனம் அமைக்க, குழாய் பொருத்த, பண்ணை குட்டை அமைக்க என பல்வேறு திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்" என்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரபு, தினகரன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X